நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

சிறுநீரக கோளாறு?: தீவிர சிகிச்சைப் பிரிவில் நடிகர் மன்சூர் அலிகான்

சென்னை:

திடீர் உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு சிறுநீரக கோளாறு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக வெளியான தகவல் தமிழ்த் திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்மைக் காலமாக அரசியலிலும் தீவிர கவனம் செலுத்தி வந்தார் மன்சூர் அலிகான்.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார். எனினும் அவருக்கு வெற்றி கிட்டவில்லை.

இதையடுத்து தனது வழக்கமான பணிகளை அவர் கவனித்து வந்த நிலையில், திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரக கோளாறுக்காக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset