நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

எலான் மஸ்க் போட்ட டுவீட்; 'பிட்காய்ன்' மதிப்பு 17% சரிவு

டோக்கியோ / ஹாங்காங்: 

உலகின் மிகப் பெரிய பணக்காரரான, எலான் மஸ்க் போட்ட ஒரு 'டுவீட்'டால், மெய்நிகர் நாணயமான, 'பிட்காய்ன்' மதிப்பு, 17 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது.

எலான் மஸ்க், 'டெஸ்லா' எனும், மின்சார கார் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். இதுவரை, டெஸ்லா காரை வாங்குவதற்கு, பிட்காய்னை பயன்படுத்தலாம் என்றிருந்த நிலையில், திடீரென, இனி பிட்காய்ன் ஏற்கப்படாது என, டுவிட்டர் வாயிலாக தெரிவித்து விட்டார், எலான் மஸ்க்.

இதையடுத்து, சந்தையில் பிட்காய்ன் மதிப்பு, 17 சதவீதம் சரிந்து விட்டது. நேற்றைய நிலவரப்படி, ஒரு பிட்காய்ன் மதிப்பு, 54,819 அமெரிக்க டாலர் வரை குறைந்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset