
செய்திகள் வணிகம்
அமெரிக்காவில் வாழ்க்கை துணைக்கும் விசா; கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை ஆதரவு
வாஷிங்டன்:
அமெரிக்காவில், 'எச் - 1 பி' விசாவுடன் பணியாற்றுவோரின் வாழ்க்கை துணைவர்களுக்கு பணி வழங்கும் திட்டத்திற்கு, 'கூகுள்' உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
அமெரிக்காவில் தங்கி பணியாற்றும் வெளிநாட்டினருக்கு, எச் - 1 பி விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்த விசாவுடன் பணியாற்றுவோரின் மனைவி அல்லது கணவரும், அமெரிக்காவில் வேலை பார்க்க, எச் - 4 என்ற விசா வழங்கப்பட்டு வந்தது. அமெரிக்க இளைஞர்களின் வேலைவாய்ப்பு கருதி, கடந்தாண்டு அப்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப், எச் - 1 பி, எச் - 4 உள்ளிட்ட விசாக்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தார். விசா வினியோகித்தை நிறுத்தி வைத்தும் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த ஆண்டு துவக்கத்தில் அதிபராக பதவியேற்ற ஜோ பைடன், டிரம்பின் அந்த உத்தரவை ரத்து செய்தார். இந்நிலையில், எச் - 1 பி விசாவுடன் பணியாற்றுவோரின் வாழ்க்கை துணைகளுக்கு பணி வழங்கும் இந்த திட்டத்திற்கு, கூகுள் தலைமையிலான 30க்கும் மேற்பட்ட அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆதரவு அளிக்க முன்வந்துள்ளன.
'அடோப், அமேசான், ஆப்பிள், இ மே, ஐ.பி.எம்., இன்டெல், மைக்ரோசாப்ட், டுவிட்டர்' உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இது குறித்து கூகுள் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை குறிப்பிட்டுள்ளதாவது: அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்து வருவோருக்கு ஆதரவு அளிப்பதில் கூகுள் பெருமை அடைகிறது. எச் - 1 பி விசாவுடன் பணியாற்றுவோரின் வாழ்க்கை துணைகளுக்கு பணி வழங்கும் இந்த திட்டத்திற்கு ஆதரவாக, கூகுள் நிறுவனத்துடன் 30 நிறுவனங்கள் கைக்கோர்த்துள்ளன. இந்தத் திட்டத்தால் வேலைவாய்ப்புகள் உருவாகும். பல குடும்பங்களுக்கு உதவியாக இருக்கும். இவ்வாறு அதில் சுந்தர் பிச்சை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
September 13, 2025, 3:31 pm
எவ்வளவு உயர்ந்தாலும் தொடர்ந்து உழைத்தால்தான் வெற்றியைத் தற்காத்துக் கொள்ள முடியும்: டத்தோஸ்ரீ சரவணன்
September 12, 2025, 8:51 pm
அமெரிக்காவுடன் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை
September 11, 2025, 9:39 pm
காயா ராயா பெருநாள் சந்தை லண்டன் உட்பட வெளிநாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும்: டைலான் முஹம்மத்
September 6, 2025, 7:51 pm
இந்தியாவின் முதல் டெஸ்லா ‘ஒய்’ மாடலை வாங்கியவர்
September 3, 2025, 12:12 pm
தங்க விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது
September 2, 2025, 3:21 pm
பெண் ஊழியருடன் உறவில் இருந்ததால் நெஸ்லே நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி பணி நீக்கம்
August 27, 2025, 6:12 pm
இந்திய ரூபாய் இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி
August 22, 2025, 9:01 am