
செய்திகள் மலேசியா
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அரை மில்லியனைக் கடந்தது
கோலாலம்பூர்:
மலேசியாவில் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை அரை மில்லியனைக் கடந்துள்ளது.
இந்த வேண்டத்தகாத மைகல் மூலம் மலேசியாவில் தொற்றுப்பரவல் கவலைக்குரிய நிலையில் இருப்பதை உணர முடிவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் புதிதாக 6,320 பேருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கையானது 505,115 ஆக அதிகரித்துள்ளது.
சிலாங்கூரில் அதிகபட்சமாக 1,647 பேரும், சரவாக்கில் 749 பேரும், கோலாலம்பூரில் 654 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜோகூர் - 477, நெகிரி செம்பிலான் - 396, பினாங்கு - 359, கெடா - 302, பேராக் - 276, பகாங் - 227, சபா - 189, திரங்கானு - 185, மலாக்கா - 175, லாபுவான் - 36, புத்ராஜெயா, பெர்லிஸ் மாநிலங்களில் தலா 18 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.