
செய்திகள் மலேசியா
சபாவில் தொற்றுப் பரவலுக்கு வித்திட்ட 'பாலேக் கம்போங்' பயணம்
கோத்தகின்னபாலு:
'பாலேக் கம்போங்' பயணங்களால் சபா மாநிலத்தில் தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தனிநபர்கள் சொந்த ஊர்களுக்கு பெருநாள் வேளையில் திரும்பியிருந்தனர். அவர்கள் மூலமாக புதிய தொற்றுத் திரள்கள் உருவாகி இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிழக்குக் கரையோர Tawau மாவட்டம், தென்மேற்கு பகுதியில் உள்ள Kola penyu ஆகிய இரு இடங்களில் புதிய தொற்றுத் திரள்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநிலத்தின் வீட்டு வசதித் துறை அமைச்சர் மசிடி மஞ்சுன் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் சபாவில் 189 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு தொற்றுப் பரவல் அதிகரித்திருப்பதாக மாநில அமைச்சர் உறுதி செய்துள்ளார்.
"லாபுவானில் இருந்து 'பாலேக் கம்போங்' பயணம் மேற்கொண்டவர்கள் மூலம் தொற்றுப் பரவியுள்ளது. கடந்த 4 தினங்களாக அங்கு மூன்று இலக்கங்களில் புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
11 நாட்களுக்கு முன்பு மாநிலத்தில் இரட்டை இலக்கங்களில் மட்டுமே தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. அதிலும் அதிகபட்சமாக கடந்த மே 11ஆம் தேதி 50 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர்," என்று மசிடி மஞ்சுன் தெரிவித்துள்ளார்.