நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒரு மில்லியன் பேர் வேலை இழக்க நேரிடலாம்: நிதியமைச்சர் விளக்கம்

கோலாலம்பூர்:

கடந்தாண்டு அமல்படுத்தப்பட்ட முதலாவது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின்போது ஏராளமானோர் வேலை வாய்ப்புகளை இழந்ததாக  நிதியமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு ஜஃப்ருல் அப்துல் அசிஸ் கூறினார்.

அதேபோன்ற கட்டுப்பாடுகள் இப்போது விதிக்கப்பட்டால் மூன்றாவது MCO காலகட்டத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் வேலை வாய்ப்புகளை இழக்க நேரிடலாம் என அவர் சுட்டிக் காட்டினார்.

"தொற்றுப் பரவல் அதிகரித்துள்ள போதிலும்  பொருளாதாரத் துறைகளை அரசாங்கம் இயங்க அனுமதித்திருப்பதற்கு வேலை வாய்ப்பின்மை விகிதம் அதிகரித்துவிடக் கூடாது என்ற அக்கறைதான் காரணம்," என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

ஏற்கெனவே பலர் வருமானத்தை இழந்து பாதிக்கப்பட்டனர் என்றும், குறைந்த வருமானம் உள்ளவர்கள்தான் பொது முடக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

"ஒரு வீட்டில் குறைந்தபட்சம் 4 பேர் இருக்கக்கூடும். அப்படியெனில்  ஒருவர் வேலை இழந்தால் 4 மில்லியன் பேர் பாதிக்கப்படுகின்றனர். இதை மனதிற்கொண்டு செயல்பட வேண்டி உள்ளது," என்று தேசிய பாதுகாப்பு மன்றக் கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களைச் சந்தித்தபோது நிதியமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு ஜஃப்ருல் அப்துல் அசிஸ் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset