
செய்திகள் மலேசியா
புதிய உச்சம்: மலேசியாவில் மேலும் 6,976 பேருக்கு கொவிட்-19 தொற்று பாதிப்பு
கோலாலம்பூர்:
மலேசியாவில் இன்று புதிதாக மேலும் 6,976 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நாட்டில் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 512,091 ஆக அதிகரித்துள்ளது.
வழக்கம்போல் சிலாங்கூரில்தான் அதிக தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 2,235 பேருக்கு கிருமி தொற்றியது. இரண்டாம் இடத்தில் உள்ள சரவாக்கில் 663 பேரும் அடுத்தபடியாக ஜொகூரில் 549 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆகக் குறைவாக பெர்லிஸ் மாநிலத்தில் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புத்ராஜெயாவில் 30 பேரும் லாபுவானில் 37 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 49 பேர் மரணமடைந்ததாகவும், புதிதாக 24 தொற்றுத் திரள்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறந்தவர்களில் 48 பேர் மலேசிய குடிமக்கள் ஆவர். ஒருவர் வெளிநாட்டவர். சிலாங்கூரில் அதிகபட்சமாக 14 பேரும், ஜொகூரில் எட்டு பேரும் பலியாகியுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
July 30, 2025, 11:15 pm
13ஆவது மலேசியத் திட்டத்தை பிரதமர் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்
July 30, 2025, 10:27 pm
மித்ராவுக்கு தெரிவிக்காமல் 16 திட்டங்களுக்கு பிரதமர் இலாகா நிதி ஒப்புதல் அளித்துள்ளது?
July 30, 2025, 10:22 pm
காதலனின் தாயைக் கொலை செய்ததாக பெண் ஒருவர் மீது குற்றச்சாட்டு
July 30, 2025, 10:19 pm
துன் மகாதீரின் பிள்ளைகள் செல்வத்தின் மூலாதாரம் குறித்து விளக்க வேண்டும்: பிரதமர்
July 30, 2025, 4:03 pm
தேவக்ஷேனின் இறுதிச் சடங்கு சோகமான சூழலில் நடைபெற்றது
July 30, 2025, 4:01 pm