
செய்திகள் மலேசியா
ஜூன் இறுதிக்குள் 8.2 மில்லியன் சினோவாக் தடுப்பூசிகள் மலேசியா வந்தடையும்
புத்ராஜெயா:
எதிர்வரும் ஜூன் மாத இறுதிக்குள் 8.2 மில்லியன் சினோவாக் தடுப்பூசிகளை மலேசியா பெற்றிருக்கும் என மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே 4.4 மில்லியன் சினோவாக் தடுப்பூசிகள் சீனாவிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், அவற்றில் 400,000 தடுப்பூசிகள் ஏற்கெனவே விநியோகிக்கப்பட்டு விட்டதாகவும் கூறினார்.
மேலும், ஒரு மில்லியன் தடுப்பூசிகள் தற்போது மலேசியா வந்தடைந்துள்ளதாக அவர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மீதமுள்ள 3 மில்லியன் தடுப்பூசிகள் அடுத்த மாத இறுதிக்குள் வந்து சேரும் என்றார் அவர்..
சீனாவைச் சேர்ந்த சினோவாக் லைவ் சயின்ஸ் நிறுனமானது மலேசியாவில் சினோவாக் தடுப்பூசியை விநியோகிக்க ஃபார்மியாநியாகா (Pharmaniaga Life Science Sdn Bhd) நிறுவனத்தை நியமித்துள்ளது. இதற்காக இருதரப்பும் கடந்தாண்டு ஒப்பந்தம் செய்துகொண்டன.
ஃபார்மா நியாகாவின் செயல்பாடுகள் மலேசிய குடிமக்களுக்கு தடுப்பசி போடும் திட்டத்தை விரைவுபடுத்த உதவும் என்று மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி மேலும் தெரிவித்தார்.