செய்திகள் மலேசியா
அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியல்: 42ஆவது இடத்தில் மலேசியா
புத்ராஜெயா:
உலகளவில் கொரோனா கிருமித் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் மலேசியா 42ஆவது இடத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சிங்கப்பூர் 105ஆவது இடத்தில் உள்ளது.
பாதிப்புப் பட்டயலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகியவை முதல் மூன்று இடங்ளைப் பிடித்துள்ளன. இம்மூன்று நாடுகளிலும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் மிக அதிகமாகப் பதிவாகி உள்ளது.
இந்தப் பட்டியலில் 3வது அலையை எதிர்கொண்டுள்ள மலேசியா 42வது இடத்தில் உள்ளது. மலேசியாவில் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை அரை மில்லியனைக் கடந்துள்ளது.
இதற்கிடையே சிங்கப்பூரில் 60 ஆயிரம் பேருக்கு இதுவரை கிருமி தொற்றியுள்ளது. அங்கு தடுப்பூசி போடும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் மேற்குறிப்பிட்ட பட்டியலில் அந்நாடு 105ஆவது இடத்தில் உள்ளது.
இந் நிலையில் சிங்கப்பூரில் மீண்டும் தொற்றுப் பரவலுக்கான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து அங்கு நடமாட்டக் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 11:12 pm
ஜொகூர் மிருகக்காட்சி சாலை அருகே போலிசார் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்
October 8, 2026, 11:11 pm
ஆலய சிலை உடைப்பு; போலிஸ் உடனடி விசாரணை நடத்த வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்
October 8, 2026, 11:09 pm
சிரம்பான் நகரில் தீபாவளி சந்தை; நமது பாரம்பரிய அடையாளத்தை விட்டுக் கொடுக்க முடியாது: டத்தோ மோகன்
October 8, 2026, 9:01 pm
புகைமூட்டம்: நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் மூடப்படும்
October 8, 2026, 4:08 pm
காற்று மாசுபாடு குறியீடு 150 முதல் 180 வரை இருந்தால் பள்ளிகளை மூட மாமன்னர் உத்தரவு
October 8, 2026, 4:07 pm
கேஎல்ஐஏ சம்பவம் தொடர்பான விசாரணை ஆவணங்களை சட்டத்துறை தலைவர் அலுவலகம் போலிசாரிடம் திருப்பி அளித்தது
October 8, 2026, 4:06 pm
