
செய்திகள் மலேசியா
இன்று மலேசியாவில் கோவிட் -19 தொற்றினால் இதுவரை இல்லாத அளவுக்கு 61 இறப்புக்கள்: நூர் ஹிஷாம் அப்துல்லாஹ்
புத்ராஜெயா:
மலேசியாவில் இன்று மட்டும் புதிய கோவிட் -19 தொற்றுக்கு, 61 பேர் இறந்துள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு இந்த இறப்பு எண்ணிக்கை உயர்ந்து உள்ளது.
கடைசியாக, மே 20ஆம் தேதிதான் அதிக அளவிலான இறப்புகள் பதிவாகின. அன்று மட்டும் 59 பேர் உயிரிழந்தனர்.
கோவிட் -19 தொற்றுத் தொடர்பான தகவல்களை இன்று திங்களன்று (மே 24) பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்த சுகாதார இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாஹ், மலேசியாவின் கோவிட் -19 மொத்த இறப்பு எண்ணிக்கை 2,309 ஆக உயர்ந்துள்ளது என்றார்.
இன்று காலமான 61 பேரில், 16 பேர் சிலாங்கூரிலும், 11 பேர் ஜோகூரிலும், மலாக்கா மற்றும் பினாங்கில் தலா ஆறு பேரும், கோலாலம்பூரில் ஐவரும், கெடாவில் நான்கு பேரும், சரவாக், நெகிரி செம்பிலன் மற்றும் பஹாங்கில் தலா மூவர், திரெங்கானுவில் இருவர், பேராக் மற்றும் லாபுவானில் தலா ஒருவர்” என்றார் டாக்டர் நூர் ஹிஷாம்.
இன்று மிகக் குறைந்த வயதில் இறந்தவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர் ஆவார். 27 வயது இளைஞரான அவர் மலாக்கா அரசு மருத்துவமனையில் இறந்தார்.
இன்று இறந்தவரில் மூத்தவர் 98 வயது பெண்மணி ஆவார். அவர் பினாங்கு அரசு மருத்துவமனையில் காலமானார்.
இவ்வாறு இன்றைய இறப்புகள் குறித்த தகவல்களை சுகாதாரத் துறை இயக்குநர் டான்ஸ்ரீ நூர் ஹிஷாம் அப்துல்லாஹ் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
July 30, 2025, 11:15 pm
13ஆவது மலேசியத் திட்டத்தை பிரதமர் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்
July 30, 2025, 10:27 pm
மித்ராவுக்கு தெரிவிக்காமல் 16 திட்டங்களுக்கு பிரதமர் இலாகா நிதி ஒப்புதல் அளித்துள்ளது?
July 30, 2025, 10:22 pm
காதலனின் தாயைக் கொலை செய்ததாக பெண் ஒருவர் மீது குற்றச்சாட்டு
July 30, 2025, 10:19 pm
துன் மகாதீரின் பிள்ளைகள் செல்வத்தின் மூலாதாரம் குறித்து விளக்க வேண்டும்: பிரதமர்
July 30, 2025, 4:03 pm
தேவக்ஷேனின் இறுதிச் சடங்கு சோகமான சூழலில் நடைபெற்றது
July 30, 2025, 4:01 pm