
செய்திகள் மலேசியா
கிளந்தானில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வரவில்லை
கோத்தபாரு:
கிளந்தானில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வரவில்லை எனத் தெரியவந்துள்ளது.
இத் தகவலை அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை இயக்குநர் டத்தோ டாக்டர் சைனி ஹுசின் (Datuk Dr Zaini Hussin)தெரிவித்துள்ளார்.
உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் தடுப்பூசி போட்டுக்கொள்வதை வேறொரு நாளுக்கு ஒத்தி வைத்தது ஆகியவையே பெரும்பாலானவர்களால் காரணமாக முன்வைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
மேலும், சிலர் தனிப்பட்ட காரணங்களால் தடுப்பூசி போட்டுக்கொள்ள வரவில்லை என்று தெரிவித்துள்ளனர் என்றும் பலர் எந்தவிதக் காரணத்தையும் கூறவில்லை என்றும் டாக்டர் சைனிஇ ஹுசின் கூறினார்.
"தடுப்பூசி போட்டுக்கொள்ள வராத அனைவருமே இரண்டாம் பகுதியில் தங்கள் பெயரைப் பதிவு செய்தவர்கள் ஆவர். தடுப்பூசி போட்டுக்கொள்ளும் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே பயனாளிகளின் பட்டியலை வைத்து அவர்களைத் தொடர்பு கொள்வோம்.
"ஒவ்வொரு தனி நபரிடமும் பேசி அவர்களால் குறித்த நேரத்தில் வர இயலுமா என்று கேட்டு உறுதி செய்வோம். எனினும் எல்லோரையும் தொடர்புகொண்டு விடமுடியும் எனும் உத்தரவாதம் இல்லை. சிலர் தொலைபேசி அழைப்புக்குக்கூட பதில் அளிக்க மாட்டார்கள்.
"எனவே தடுப்பூசி போட்டுக்கொள்ளும் தேதியைத் தள்ளிப்போட விரும்புவர்கள் அதற்குரிய தகவலை முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தை வேறு யாருக்காவது ஒதுக்கமுடியும்," என்றார் டாக்டர் சைனி ஹுசின்
தொடர்புடைய செய்திகள்
July 30, 2025, 11:15 pm
13ஆவது மலேசியத் திட்டத்தை பிரதமர் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்
July 30, 2025, 10:27 pm
மித்ராவுக்கு தெரிவிக்காமல் 16 திட்டங்களுக்கு பிரதமர் இலாகா நிதி ஒப்புதல் அளித்துள்ளது?
July 30, 2025, 10:22 pm
காதலனின் தாயைக் கொலை செய்ததாக பெண் ஒருவர் மீது குற்றச்சாட்டு
July 30, 2025, 10:19 pm
துன் மகாதீரின் பிள்ளைகள் செல்வத்தின் மூலாதாரம் குறித்து விளக்க வேண்டும்: பிரதமர்
July 30, 2025, 4:03 pm
தேவக்ஷேனின் இறுதிச் சடங்கு சோகமான சூழலில் நடைபெற்றது
July 30, 2025, 4:01 pm