
செய்திகள் மலேசியா
லாபுவானில் 30 நாட்களுக்கு மேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்
புத்ராஜெயா:
தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த ஏதுவாக லாபுவானில் மேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை எனப்படும் 'ஈ.எம்சிஓ' (EMCO) அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள 5 துணைப் பகுதிகளில் புதன்கிழமை முதல் 30 நாட்களுக்கு இந்த நடமாட்டக் கட்டுப்பாடு அமலில் இருக்கும்.
தொற்றுப் பரவல் வேகம் அதிகரித்த காரணத்தினாலேயே லாபுவானில் இந்த நடமாட்டக் கட்டுப்பாடு உடனடியாக அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொற்றுப் பரவல் வேகத்தைக் கணக்கிடும் RO (Reproduction number) லாபுவானில் 2.55 ஆக உள்ளது.
2.0க்கும் அதிகமாக இருப்பின் மிகப்பெரிய அளவில் தொற்றுப் பரவல் ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, அனைத்துவித ஆபத்துகளையும் மதிப்பீடு செய்த பிறகு லாபவானில் 'ஈ.எம்சிஓ' (EMCO) அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும் இதன்மூலம் சமூகப் பரவலை தடுக்க இயலும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, பெல்டா உமாஸ் சபா (Felda Umas Sabah), கம்போங் பாகோ ஹலேர் (சரவாக்) Kampung Bako Hilir in Sarawak ஆகிய பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இன்றோடு முடிவுக்கு வந்தது. முன்னதாக அது நாளை முடிவுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
July 30, 2025, 11:15 pm
13ஆவது மலேசியத் திட்டத்தை பிரதமர் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்
July 30, 2025, 10:27 pm
மித்ராவுக்கு தெரிவிக்காமல் 16 திட்டங்களுக்கு பிரதமர் இலாகா நிதி ஒப்புதல் அளித்துள்ளது?
July 30, 2025, 10:22 pm
காதலனின் தாயைக் கொலை செய்ததாக பெண் ஒருவர் மீது குற்றச்சாட்டு
July 30, 2025, 10:19 pm
துன் மகாதீரின் பிள்ளைகள் செல்வத்தின் மூலாதாரம் குறித்து விளக்க வேண்டும்: பிரதமர்
July 30, 2025, 4:03 pm
தேவக்ஷேனின் இறுதிச் சடங்கு சோகமான சூழலில் நடைபெற்றது
July 30, 2025, 4:01 pm