செய்திகள் மலேசியா
4 தெற்காசிய நாடுகளில் இருந்து மலேசியா வருபவர்கள் 21 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்
கோலாலம்பூர்:
தெற்காசியாவைச் சேர்ந்த 4 நாடுகளில் இருந்து மலேசியா வரக்கூடியவர்கள் கட்டாயமாக 21 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர் என மலேசிய அரசு அறிவித்துள்ளது.
இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், நேப்பாளம் ஆகிய 4 நாடுகளில் இருந்து மலேசியா வரும் மலேசியக் குடிமக்களுக்கும் இத் தனிமைப்படுத்தல் உத்தரவு பொருந்தும் என மூத்த அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகூப் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்தியாவில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு மட்டுமே 21 நாள்கள் தனிமைப்படுத்தும் நடைமுறை அமலில் இருந்தது.
இந் நிலையில் பல்வேறு நாடுகளிலும் தொற்று பாதிப்பு அதிகரிப்பதை அடுத்து மலேசிய அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது.
இதற்கிடையே இந்தக் குறிப்பிட்ட நாடுகள் அல்லாமல் பிற நாடுகளில் இருந்து மலேசியா வருபவர்கள் முன்பு 10 நாள் தனிமைப்படுத்தல் நடைமுறையைப் பின்பற்ற வேண்டி இருந்தது. தற்போது அது 14 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மலேசியா வருவதற்கு 3 நாட்களுக்கு முன்பே கொரோனா தொற்றுப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும், அதில் தொற்றுப் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் மலேசியா வரும் பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், மலேசியா வந்த பிறகும் அவர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படும்.
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 11:12 pm
ஜொகூர் மிருகக்காட்சி சாலை அருகே போலிசார் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்
October 8, 2026, 11:11 pm
ஆலய சிலை உடைப்பு; போலிஸ் உடனடி விசாரணை நடத்த வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்
October 8, 2026, 11:09 pm
சிரம்பான் நகரில் தீபாவளி சந்தை; நமது பாரம்பரிய அடையாளத்தை விட்டுக் கொடுக்க முடியாது: டத்தோ மோகன்
October 8, 2026, 9:01 pm
புகைமூட்டம்: நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் மூடப்படும்
October 8, 2026, 4:08 pm
காற்று மாசுபாடு குறியீடு 150 முதல் 180 வரை இருந்தால் பள்ளிகளை மூட மாமன்னர் உத்தரவு
October 8, 2026, 4:07 pm
கேஎல்ஐஏ சம்பவம் தொடர்பான விசாரணை ஆவணங்களை சட்டத்துறை தலைவர் அலுவலகம் போலிசாரிடம் திருப்பி அளித்தது
October 8, 2026, 4:06 pm
