நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எல்.ஆர்.டி ரயில்கள் நேருக்கு நேர் மோதல்; பயணிகள் காயம்

கோலாலம்பூர்:

கே.எல்.சி.சி யிலிருந்து கிளானாஜெயாவுக்கு சென்ற ரயிலும் எதிர்புறத்திலிருந்து வந்த ரயிலும் (எல்.ஆர்.டி) சுரங்கப்பாதையில் நேருக்கு நேர் மோதின.

அம்பாங் நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில் எதிர் திசையில் இருந்து வந்த  வெற்று ரயிலுடன் நேருக்கு நேர் மோதியது. இதனால் பயணிகள் பெட்டியில் வீசப்பட்டனர்.

இதை கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டான்ஸ்ரீ அன்வர் மூசா தனது ட்விட்டர் பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக அவர் கூறினார்.

"இந்த மோதல் கே.எல்.சி.சி அருகில் நிலத்தடி (எல்.ஆர்.டி) சுரங்கப் பாதையில் நடந்தது. விபத்தில் பல பயணிகள் காயமடைந்தனர்" என்று அவர் தனது பதிவில் மேலும் தெரிவித்தார்.

"காயமடைந்த அனைத்து பயணிகளும் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அனைத்து பயணிகளையும் பாதுகாப்பாக கொண்டு செல்வதே எங்கள் முன்னுரிமை" என்று அவர் கூறினார்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்த விபத்து குறித்தான செய்திகளும் படங்களும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.  

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset