நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரயில் விபத்து: 166 பேர் காயம்; 47 பேர் படுகாயம்

கோலாலம்பூர்:

இரு எல்.ஆர்.டி. ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் குறைந்தபட்சம் 166 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அவர்களில் 46 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கே.எல்.சி.சி. ரயில் நிலையம் அருகே இன்றிரவு இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பெர்னாமா செய்தி முகமை தெரிவித்துள்ளது.

ஒரு ரயிலில் 213 பயணிகள் இருந்ததாக டான்வாங்கி மாவட்டக் காவல்துறை தலைவர்  உறுதி செய்துள்ளார். மற்றொரு ரயில் பயணிகளின்றி காலியாக இருந்ததை கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டான்ஸ்ரீ அனுவார் மூசா முன்னர் உறுதி செய்திருந்தார்.

மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளித்து ரயிலில் இருந்த மற்ற பயணிகளைப் பத்திரமாக வெளியேற்றினர்.  

காயமடைந்த அனைவரும் உடனடியாக கோலாலம்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset