
செய்திகள் மலேசியா
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ரயில் விபத்து புகைப்படங்கள், செய்திகள்
கோலாலம்பூர்:
ரயில் விபத்து தொடர்பாக பல்வேறு காணொளிப் பதிவுகளும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
ரத்தக் காயங்களுடன் பயணிகள் பலர் தரையில் படுத்திருப்பதும், ரயில் பெட்டிகளுக்குள் அவர்கள் கொண்டுவந்த பொருட்கள் சிதறிக் கிடப்பதையும், கண்ணாடித் துண்டுகள் இருக்கைகள் மீதும் ரயில் பெட்டிகளுக்குள்ளும் சிதறிக் கிடப்பதையும் அந்தப் புகைப்படங்களில் பார்க்க முடிகிறது.
இதற்கிடையே விபத்து நிகழ்ந்த பகுதிக்கு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் விரைந்து சென்று பயணிகளுக்கு உதவி செய்து அவர்களை ரயிலில் இருந்து பாதுகாப்பாக மீட்டனர்.
இந்த இரவு நேர விபத்து மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதே வேளையில் மீட்புப் படையினர் துரித கதியில் செயல்பட்டதாக ஒரு தரப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இன்றிரவு சமூக வலைத்தளங்களில் மலேசியர்கள் இந்த விபத்து குறித்த தகவல்களையும் புகைப்படங்களையும் தான் அதிகம் பகிர்வார்கள் என எதிர்பார்க்கலாம்.