நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரயில் விபத்து எவ்வாறு நிகழ்ந்தது?

கோலாலம்பூர்:

ரயில் விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து டாங் வாங்கி காவல்துறை தலைவர் முஹம்மத் ஜைனல் அப்துல்லா விவரித்துள்ளார்.

மோதிக்கொண்ட இரு ரயில்களும் 40 கிலோமீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்ததாகவும் விபத்து நிகழ்ந்த போதும் இதே வேகத்தில்தான் அவை சென்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"ஒரு ரயிலில் மட்டும் பயணிகள் இருந்தனர். காலியாக வந்த இன்னொரு ரயில் கம்போங் பாருவில் இருந்து கோம்பாக் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. தகவல் தொடர்பில் ஏற்பட்ட தவறு காரணமாக விபத்து நிகழ்ந்திருக்கலாம். இரு ரயில்களும் ஒரே தடத்தில் சென்றிருக்கக்கூடும். இதுகுறித்து விரிவான விசாரணை நடந்து கொண்டிருக்கிறது," என்று முஹம்மத் ஜைனல் அப்துல்லா கூறியுள்ளார்.

இரு இலகு ரயில்களும் தானியங்கி முறையில் கணினி தொழில்நுட்பத்துடன் இயங்குபவை.

உலகிலேயே நீண்ட தூரம் பயணப்படும் ஓட்டுநர் இல்லாத ரயில் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset