செய்திகள் மலேசியா
எல்ஆர்டி விபத்து: முன்களப் பணியாளர்களுக்கும் விபத்தில் சிக்கியோருக்கும் இலவச பானங்கள் அளித்த உணவகம்
கோலாலம்பூர்:
எல்.ஆர்.டி. விபத்துப் பகுதியில் மீட்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்ட முன்களப் பணியாளர்களுக்கு அருகில் இருந்த உணவகங்கள் இலவச பானங்களை வழங்கின. இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்தனர்.
NZ curry house உணவகம் நேற்று விபத்து நிகழ்வதற்கு முன்பே பணிநேரம் முடிந்து மூடப்பட்டு விட்டது. எனினும் விபத்து குறித்து அறிந்ததும் அந்த உணவகத்தின் நிர்வாகம் உடனடியாக மீட்பு மற்றும் இதர பணிகளில் ஈடுபட்டிருந்த முன்களப் பணியாளர்களுக்கு இலவச பானங்களை வழங்கி துணை நின்றது.
தனது முதலாளி முஹம்மது ஜபிடி, இரவு தொடர்பு கொண்டு பேசியதாகவும் உடனடியாக தேநீர், நெஸ்கஃபே ஆகியவற்றை தயாரித்து விபத்துப் பகுதிக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டதாகச் சொல்கிறார் NZ curry house உணவகத்தின் மேற்பார்வையாளரான சிராஜுதீன் அப்துல் ஜபார் கூறுகிறார்.
இந்த உணவகம் விபத்து பகுதியில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் ஜாலான் அம்பாங்கில் அமைந்துள்ளது.
"இந்த விபத்து குறித்து நாங்கள் கவலை கொண்டோம். ஏதேனும் ஒரு வகையில் உதவ விரும்பினோம். அந்த இரவு வேளையில் அருகே எந்தக் கடையும் திறந்திருக்காது. நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக அவை மூடப்பட்டிருக்கும்.
"முன்களப் பணியாளர்களுக்கும் விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கும் தாகமெடுத்தால் அதை எப்படி தணித்துக்கொள்ள முடியும்? அவர்களால் எங்கே பானங்களை வாங்க முடியும்? எனவேதான், எங்கள் உணவக முதலாளி ஜபிடி இலவசமாக பானங்களை சம்பவ இடத்திற்கு உடனடியாக கொண்டு சென்று சேர்க்க துரிதப்படுத்தினார்; நாங்களும் வழங்கினோம் என்று மேற்பார்வையாளர் சிராஜுதீன் மேலும் கூறியுள்ளார்.
இந்த நல்லெண்ண அடிப்படையிலான செயல்பாடு மனதை நெகிழ வைப்பதாக உள்ளது என பிரசாரனா மலேசியா பெர்ஹாடின் இயக்குனர் இஷாக் ஜொஹாரி தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 10:55 am
செந்தூல் கம்போங் காசிப்பிள்ளையில் அதிகாலையில் தீ விபத்து: ஓர் ஆடவர் பாதிக்கப்பட்டார்
August 24, 2026, 10:27 am
நாட்டிலுள்ள நான்கு மாநிலங்களில் காற்றின் தர குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
August 23, 2026, 9:23 pm
புகைமூட்டத்தால் ஆஸ்துமா, சுவாசக்குழாய் தொற்று பாதிப்புகள் கடுமையாக அதிகரித்துள்ளன
August 23, 2026, 9:22 pm
டொயோட்டா அல்பார்ட் காரில் ஆடவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்
August 23, 2026, 8:43 pm
செந்தூல் வட்டாரங்களில் தேசியக் கொடியை வழங்கி தேசியப்பற்றை மிளிரச் செய்த டத்தோ சைமன் சுரேஷ்
August 23, 2026, 8:42 pm
