
செய்திகள் மலேசியா
6 ஆயிரம் ஊடகப் பணியாளர்களுக்கு வெகு விரைவில் தடுப்பூசி
புத்ராஜெயா:
மலேசியாவில் உள்ள சுமார் 6 ஆயிரம் ஊடகப் பணியாளர்களுக்கு வெகு விரைவில் தடுப்பூசி செலுத்தப்படும் என தேசிய தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் டத்தோ கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
முன்களப் பணியாளர்களுடன் ஆசிரியர்களுக்கும் ஊடகப் பணியாளர்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் முடிவுக்கு ஏற்ப ஊடகப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று அவர் விளக்கமளித்துள்ளார்.
"ஊடகப் பணியாளர்கள் குறித்த விவரங்கள் கிடத்த பிறகு அவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நேரம் ஒதுக்கப்படும். இது தொடர்பாக தடுப்பூசி பணிக்குழுவானது தேசிய தகவல் தொடர்பு பல்லூடக அமைச்சுடன் இணைந்து பணியாற்றி வருவதாக அமைச்சர் கைரி குறிப்பிட்டடார்.
முன்னதாக அனைத்து ஊடகப் பணியாளர்களுக்கும் இந்த மாதம் தடுப்பூசி போடப்படும் என அவர் கூறியிருந்தார்.
பணியிலிருக்கும்போது அவர்களை நோய் தொற்றுவதற்கான ஆபத்துகள் அதிகம் இருப்பதால் விரைவாக தடுப்பூசி போடப்பட வேண்டியது அவசியம் என்று அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.