
செய்திகள் மலேசியா
இஸ்ரேலிய ‘உளவுத்துறை’ விமானம் சிங்கப்பூர் ராணுவ தளத்தில் தரையிறங்கி இருக்கிறது. மலேசியாவுக்கு மருட்டலா?
சிங்கப்பூர்:
இஸ்ரேலிய பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு விமானம் நேற்று சிங்கப்பூர் வான்வெளியில் நான்கு மணி நேரம் பறந்து பயா லெபாரில் உள்ள இராணுவத் தளத்தில் தரையிறங்கி இறங்கி இருக்கிறது. தரை இறங்குவதற்கு முன்னர் மலேசிய இந்தோனேசிய வான்வெளியில் ஊடுருவி வேவு பார்த்திருக்குமா என்று சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விமானத்தின் வருகை அண்டை முஸ்லிம் நாடுகளுக்கு இடையே பதட்டத்தைத் தூண்டி இருக்கிறது.
பதிவு எண் 4X-AOO ஐக் கொண்ட இந்த போயிங் 737-400 ரக விமானம் இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ்-எல்டா (IAI-Elta) க்கு சொந்தமானது. இந்த விமானம் டெல்அவிவின் முக்கிய பாதுகாப்பு புலனாய்வு மற்றும் மின்னணு அமைப்புகளில் நிபுணத்துவம் பெற்றது என்று ஆசியா பாதுகாப்பு செய்தி இதழ் தெரிவித்துள்ளது.
இந்த விமானம் உணர்திறன் வாய்ந்த ரேடார் மற்றும் உளவு கண்காணிப்பு கருவிகளைக் கொண்டிருக்கிறது என்று அப் பத்திரிகை கூறியது.
"இது ஒரு புதிய வகை வேவு விமானம் என்று கூறப்படுகிறது. சோதனைப் பயணமாக இங்கு அனுப்பி சோதித்துப் பார்த்திருக்கலாம் என்று அனுப்பப்பட்டிருக்கிறது" என்று அது கூறியது,
இந்த விமானம் வணிக விமானங்களுக்கான ஏவுகணை பாதுகாப்பு அம்சங்களுக்கும் மேலதிகமாக பல தகவல் பரிமாற்ற விடயங்களைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, “கடல்சார் ரோந்து சமிக்ஞை நுண்ணறிவு, செயற்கை துளை ரேடாரைப் பயன்படுத்தி படம் எடுக்கும் நுண்ணறிவு உட்பட பல அம்சங்கள் இந்த விமானத்தில் பொருத்தப்பட்டுள்ளன. அதற்குரிய ஆதாரங்களை அந்த இதழ் மேற்கோளிட்டுள்ளது.
விமானக் கண்காணிப்பு வலைத்தளமான ஃப்ளைக்ராடார் 24 (Flygrador 24) உடனான இதனை உறுதிப்படுத்தியது. அமெரிக்க முன்னாள் இராணுவ விமான தளமாக பயன்படுத்தப்பட்டு வந்த பயா லெபார் விமான நிலையத்தில் இந்த விமானம் இருப்பதை உறுதிப்படுத்தியது.
மலேசியாவில் வசிக்கும் பாலஸ்தீனிய எதிர்ப்புக் குழு ஹமாஸின் அதிகாரிகளை குறிவைத்து இஸ்ரேலிய முகவர்கள் ஏவக்கூடிய எந்தவொரு தாக்குதலுக்கும் எச்சரிக்கையாக தாங்கள் இருப்பதாக புத்ராஜயா கூறிய ஒரு வாரத்திற்குள் இந்த விமானம் வந்திருப்பது சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.
"போலிஸ், பிற பாதுகாப்பு நிறுவனங்களுடன் சேர்ந்து, பொது ஒழுங்கையும், இந்த நாட்டில் பாலஸ்தீனியர்கள் உட்பட மலேசியர்களின் பாதுகாப்பையும் பாதுகாக்க அனைத்து அம்சங்களிலும் பாதுகாப்புக் கட்டுப்பாட்டை முடுக்கிவிட்டுள்ளது" என்று உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுதீன் தெரிவித்துள்ளார்.
மலேசியாவிலிருந்து பிரிந்த பின்னர், சிங்கப்பூர் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொண்டது. சிங்கப்பூரின் ஆயுதப்படைகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் இஸ்ரேல் அரசின் மாதிரியாக இருப்பது கவனிக்கத்தக்கது.
சிங்கப்பூரின் இஸ்ரேலுடனான அன்பான உறவுகள் குறித்து கடந்த காலங்களில் பதட்டங்கள் தூண்டப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 10:58 pm
ஜோகூர் சோதனைச் சாவடியைக் கடக்க உதவும் QR குறியீடு
September 18, 2025, 10:19 pm
மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதீர்கள்; உணவகங்களில் புகைபிடிக்கும் தடையை கடைபிடியுங்கள்: பிரெஸ்மா
September 18, 2025, 10:17 pm
காணாமல் போன சபா மின்சாரத் துறை ஊழியர் கெனிங்காவில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்
September 18, 2025, 10:16 pm
இளைஞர்களின் குரல்களைக் கேளுங்கள்: ஆசியான் தலைவர்களுக்கு பிரதமர் வலியுறுத்து
September 18, 2025, 10:15 pm
கம்போங் சுங்கை பாரு மறுமேம்பாடு: சிலாங்கூர் சுல்தானின் நிலைப்பாட்டை அன்வார், ஹம்சா ஆதரித்தனர்
September 18, 2025, 10:14 pm
கம்போங் சுங்கை பாரு பிரச்சினை; மலாய்க்காரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
September 18, 2025, 2:45 pm
அமைச்சர் அறிக்கை வெளியிடுவதைத் தடுக்க சம்சுல் ஹரிசின் தாயாருக்கு இடைக்கால உத்தரவு
September 18, 2025, 2:43 pm
ஷாராவை பகடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பள்ளி மாற்றப்பட்டனர்
September 18, 2025, 2:40 pm