
செய்திகள் மலேசியா
மலேசியாவில் இன்று கோவிட் -19 இறப்புகள் அதிகம்; ஐ.சி.யூ நோயாளிகளும் இதுவரை இல்லாத அளவுக்கு பெருகி உள்ளனர்: நூர் ஹிஷாம் கவலை
கோலாலம்பூர்:
ஒரே நாளில் அதிக கோவிட் -19 தொற்று இறப்புகளுக்கு இன்று மலேசியா ஆளாகி இருக்கிறது.
சமீபத்தில் வந்த தகவலின்படி இன்று மாலை 5.00 மணி வரை 63 நோயாளிகள் இறந்ததாக சுகாதாரத் துறை அறிவித்து இருக்கிறது.
சுகாதார இயக்குநர் ஜெனரல் டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாஹ் இது குறித்து கூறும்போது தற்போது 756 கோவிட் -19 நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவுகளில் (ஐ.சி.யூ) சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றைய நோயாளிகளின் எண்ணிக்கையான 726 பேரை விட அதிகம்.
"ஐ.சி.யுவில் சிகிச்சை பெற்று வரும் 756 நோயாளிகளில், 377 பேருக்கு சுவாசிக்க வென்டிலேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளனர். இது மிகவும் கவலை அளிக்கும் தகவலாகும் " என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 1:00 pm
13ஆவது மலேசியா திட்டத்திற்காக அரசாங்கம் 611 பில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது: பிரதமர்
July 31, 2025, 11:11 am
மலிவு விலையிலான சிறப்பு வகை முட்டைகள்: நாளை முதல் விற்பனைக்கு வரும்
July 31, 2025, 11:08 am
அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை அச்சுறுத்த வேண்டாம்: மொஹைதின்
July 31, 2025, 11:07 am
ஏமாற்றப்பட்டிருந்தால் மத்திய அரசாங்கத்தை விட்டு ஏன் மஇகா வெளியேறவில்லை?: புவாட் கேள்வி
July 30, 2025, 11:15 pm