
செய்திகள் மலேசியா
டத்தோஸ்ரீ தாஜுதீன் அப்துல் ரஹ்மான் அதிரடி நீக்கம்
கோலாலம்பூர்:
பிரசாரனா மலேசியா பெர்ஹாட்டின் தலைவர் பொறுப்பிலிருந்து தாஜுதீன் அப்துல் ரஹ்மான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
அவரைப் பதவியிலிருந்து நீக்கும் அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக நிதி அமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அசிஸ் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நிகழ்ந்த எல்.ஆர்.டி. ரயில் விபத்து சம்பவத்தை ஒட்டி செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற தாஜுதீன் அப்துல் ரஹ்மான், சில கேள்விகளுக்கு பதிலளித்த விதம் கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது.
விபத்துக்குள்ளான இரு ரயில்களும் முத்தமிட்டுக் கொண்டன என்று வெளிநாட்டு செய்தியாளர் எழுப்பிய ஒரு கேள்விக்கு அவர் பதிலளித்திருந்தார். அவரது இந்தப் பதில் குறித்து சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தனர்.
அவர் பதவி விலக வலியுறுத்தி இணையம் வழி தொடங்கப்பட்ட பிரசார இயக்கத்தில் 24 மணி நேரத்துக்குள் 1 லட்சம் பேர் தங்கள் ஆதரவைப் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் தாஜுதீன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
"பிரசாரனாவுக்கு இதுவரை தாங்கள் அளித்துள்ள பங்களிப்புக்கும் உங்களது சேவைக்கும் நன்றி தெரிவிக்கிறேன்," என்று நிதியமைச்சர் தாஜுதீனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
July 30, 2025, 11:15 pm
13ஆவது மலேசியத் திட்டத்தை பிரதமர் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்
July 30, 2025, 10:27 pm
மித்ராவுக்கு தெரிவிக்காமல் 16 திட்டங்களுக்கு பிரதமர் இலாகா நிதி ஒப்புதல் அளித்துள்ளது?
July 30, 2025, 10:22 pm
காதலனின் தாயைக் கொலை செய்ததாக பெண் ஒருவர் மீது குற்றச்சாட்டு
July 30, 2025, 10:19 pm
துன் மகாதீரின் பிள்ளைகள் செல்வத்தின் மூலாதாரம் குறித்து விளக்க வேண்டும்: பிரதமர்
July 30, 2025, 4:03 pm
தேவக்ஷேனின் இறுதிச் சடங்கு சோகமான சூழலில் நடைபெற்றது
July 30, 2025, 4:01 pm