
செய்திகள் மலேசியா
பொருட்கள் வாங்க இரண்டு மணி நேரம்தான்: அமைச்சு திட்டவட்டம்
கோலாலம்பூர்:
அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட பொருட்கள் வாங்க பேரங்காடிகளில் கூடுதல் நேரத்தைச் செலவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உள்நாட்டு வர்த்தகம் மற்றும் பயனீட்டாளர் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.
கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக வளாகங்களிலும் பேரங்காடிகள், உழவர் சந்தைகள், மற்றும் இரவுச் சந்தைகளில் உள்ளிட்ட இடங்களிலும் கொரோனா நெருக்கடி காரணமாக பொதுமக்கள் பொருட்களை வாங்க அதிகபட்சம் 2 மணி நேரம் மட்டுமே எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைப் பயனீட்டாளர்கள் முறையாகக் கடைப்பிடிக்கின்றனரா என்பதைக் கண்டறிய பயனீட்டாளர் அமைச்சு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் குறிப்பிட்ட இப்பகுதிகளில் 2,262 அமலாக்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என்றும் அனைத்து SOPகளும் முறையாக கடைபிடிக்கப்படுகின்றனவா என்பதை இந்த அதிகாரிகள் கண்காணிப்பர் என்றும் அந்த அமைச்சு கூறியுள்ளது.
இந்த நடவடிக்கையில் சுகாதார அமைச்சு, காவல்துறை மற்றும் உள்ளூர் அதிகாரிகளும் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.