நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் இன்று கோவிட் -19 நோய்த்தொற்றுகள் இன்று 7,857; புதிய உச்ச எண்ணிக்கை இது: சுகாதார அமைச்சு தகவல்

கோலாலம்பூர்:

கடந்த 24 மணி நேரத்தில் 7,857 கோவிட் - 19 தொற்றுகளுடன் மற்றொரு புதிய சாதனையை மலேசியா எட்டி இருக்கின்றது. இதுவரை இல்லாத உச்ச தொற்று எண்ணிக்கை இதுவாகும்.

இன்று மதியம் நிலவரப்படி 2,675 ஆக அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றுகள் சிலங்கூரில் பதிவாகி உள்ளன.

சரவாக் 772 தொற்றாளர்களுடன் இரண்டாவது இடத்திலும், கிளந்தான் 754 பேருடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசம் 561, ஜோகூர் 549, கெடா 441, பினாங்கு 365, நெகிரி செம்பிலான் 353, திரெங்கானு 282, பஹாங் 238, மலாக்கா 234,  பேராக் 228, லாபுவான் 170, புத்ராஜெயா 12, பெர்லிஸ் 6 பேர் தொற்றுக்கு இலக்காகி இருக்கின்றனர்.

இவ்வாறு இன்றைய நிலவரத்தை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset