
செய்திகள் மலேசியா
வரும் சனிக்கிழமை முதல் ஜூன் 11ஆம் தேதி வரை சரவாக்கில் MCO
கூச்சிங்:
வரும் சனிக்கிழமை முதல் ஜூன் 11ஆம் தேதி வரை சரவாக் மாநிலத்தில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலுக்கு வரும். இத்தகவலை அம்மாநிலத்தின் துணை முதல்வர் டத்தோ அமர் டக்ளஸ் உகாஹ் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு மன்றம் அம்மாநிலத்தில் பின்பற்றப்பட வேண்டிய SOPகளை வெளியிடும் என்று அவர் கூறினார்.
நாட்டில் கொரோனா கிருமித்தொற்று பாதிப்பு சீராக அதிகரித்த வண்ணம் உள்ளது. தினந்தோறும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
இந்நிலையில் சரவாக்கிலும் தொற்றுப் பரவலை உடனடியாகக் குறைக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக துணை முதல்வர் டத்தோ அமர் டக்ளஸ் கூறினார்.
"சில வாரங்களுக்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்துவது தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான முக்கிய நடவடிக்கையாக அமையும். SOPக்கள் அனைத்தையும் தேசிய பாதுகாப்பு மன்றம் அறிவிக்கும்.
"அதன் இணையதளத்தில் SOPகள் வெளியிடப்படும். மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவானது தேசிய பாதுகாப்பு மன்றத்தின் ஒப்புதலுடன் இந்த மாநிலம் தழுவிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்தி உள்ளது," என்றார் டத்தோ அமர் டக்ளஸ்.
தொடர்புடைய செய்திகள்
July 30, 2025, 11:15 pm
13ஆவது மலேசியத் திட்டத்தை பிரதமர் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்
July 30, 2025, 10:27 pm
மித்ராவுக்கு தெரிவிக்காமல் 16 திட்டங்களுக்கு பிரதமர் இலாகா நிதி ஒப்புதல் அளித்துள்ளது?
July 30, 2025, 10:22 pm
காதலனின் தாயைக் கொலை செய்ததாக பெண் ஒருவர் மீது குற்றச்சாட்டு
July 30, 2025, 10:19 pm
துன் மகாதீரின் பிள்ளைகள் செல்வத்தின் மூலாதாரம் குறித்து விளக்க வேண்டும்: பிரதமர்
July 30, 2025, 4:03 pm
தேவக்ஷேனின் இறுதிச் சடங்கு சோகமான சூழலில் நடைபெற்றது
July 30, 2025, 4:01 pm