நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிங்கப்பூரிடம் தடுப்பூசி வாங்க திட்டமிடும் ஜோகூர்: மந்திரி பெசார் தகவல்

ஜோகூர்:

ஜோகூர் மாநிலத்திற்குத் தேவைப்படும் கொரோனா தடுப்பூசிகளை சிங்கப்பூரிடம் இருந்து  தருவிக்கத் திட்டமிட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் டத்தோ ஹஸ்னி மொஹமத் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி போடுவதில் முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அவர் கூறினார்.  

ஜோகூர் அரசு immu plan Johor திட்டத்தின்கீழ் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பொருளாதார முன்களப் பணியாளர்களுக்கு என  கூடுதலாக 1 லட்சம் தடுப்பூசிகளைப் பெற மாநில அரசு முயற்சித்து வருவதாக குறிப்பிட்ட மந்திரிபெஸர் டத்தோ ஹஸ்னி மொஹமட், அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

"கொரோனா கிருமித் தொற்று குறித்த சரியான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது அவசியம். எனவே, மாநிலத்தில் உள்ள அனைத்து மக்கள்பிரதிநிதிகளுக்கும் இதற்காக 50 ஆயிரம் ரிங்கிட் கூடுதலாக ஒதுக்கப்படும்," என்றார்  டத்தோ ஹஸ்னி மொஹமத்.

மாநிலங்களே தங்கள் சொந்த முயற்சியில் தடுப்பூசிகளைப் பெறுவதற்கு அனுமதிக்க வேண்டும் என பினாங்கு அம்மாநில அரசு அண்மையில் கூட்டரசுப் பிரசேத அரசாங்கத்திடம் வலியுறுத்தியது. 

அரசு அங்கீகரித்த தடுப்பூசிகளை முறையாக தருவிப்பதில் தடையேதும் இல்லை என  அமைச்சர் கைர் ஜமாலுதீன் அண்மையில் தெளிவுபடுத்தி இருந்தார். இந்நிலையில் சொந்தமாக கொரோனா தடுப்பூசிகளை வாங்கத் திட்டமிட்டுள்ளதாக ஜொகூர் மாநில அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset