நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாடாளுமன்ற அமர்வை உடனடியாக கூட்டவேண்டும்: பக்கத்தான் ஹரப்பான்  வலியுறுத்து

கோலாலம்பூர்:

நாடாளுமன்ற அமர்வை உடனடியாக கூட்டவேண்டும் என பக்கத்தான் ஹரப்பான்   தலைமைத்துவ மன்றம் (உச்ச மன்றம்) (presidential council) வலியுறுத்தி உள்ளது.  

நாட்டில் அமலில் உள்ள அவசர நிலை பிரகடனத்தை முடிவுக்குக் கொண்டு வர மாமன்னரிடம் பரிந்துரைக்க வேண்டும் என அவசர நிலைக்கான சுயாதீனக் குழுவிடம் (Special Independent Emergency Committee ) பக்காத்தான் ஹரப்பான் கோரிக்கை விடுத்துள்ளது.
அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவருவதன் மூலம் இயன்ற விரைவில் நாடாளுமன்ற அமர்வை மீண்டும் கூட்டமுடியும் என அக் கட்சி சுட்டிக்காட்டி உள்ளது.

இத்தகைய நடவடிக்கையானது மலேசிய ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்க உதவும் என்றும், மக்களின் வாழ்வையும் வாழ்வாதாரங்களையும் வெகுவாகப் பாதித்துள்ள கிருமித் தொற்றிலிருந்து நாடு மீட்சி பெற உதவும் என்றும் பக்காத்தான் ஹரப்பான்  தலைமைத்துவ மன்றம் தெரிவித்துள்ளது.

"எதிர்வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதிக்குப் பிறகு அவசரநிலைப் பிரகடனத்தை நீட்டிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல், அதை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

"கொரோனா கிருமித் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் பெரிக்கத்தான் நேசனல் அரசாங்கம் தோல்வி அடைந்துவிட்டது. ஜனவரி 11ஆம் தேதி நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அதன்பின்னர் முழுமையான அதிகாரத்தை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றிருந்த போதிலும் தொற்றுப் பரவல் குறையவில்லை.

"நடப்பு நிர்வாகம் அதிகாரத்தில் நீடிக்கவேண்டும் என்ற நோக்கத்துடனேயே முடக்கநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது," என பக்கத்தான் ஹரப்பான் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset