
செய்திகள் மலேசியா
தொற்று எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு: எச்சரிக்கிறார் மகாதீர்
கோலாலம்பூர்:
எதிர்வரும் நாட்களில் கிருமித் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என முன்னாள் பிரதமர் துன் மகாதீர் கூறியுள்ளார்.
முழு முடக்க நிலையை அமல்படுத்துவதால் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் என்ற போதிலும் மேலும் பல உயிரிழப்புகளை தவிர்க்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். மூன்றாவது முறையாக அறிவ்விக்கப்பட்டுள்ள MCO தொடர்பான SOPகள் கடுமையாக்கப்பட்டது குறித்து கருத்துரைத்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
"தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைப் பார்க்கும்போது நடப்பில் உள்ள SOPகள் பலனளிக்கவில்லை என்று தெரிகிறது. தற்போது சமூக இடைவெளி ஒரு மீட்டராக உள்ளது. அதை 2 மீட்டராக அதிகரிக்க வேண்டும்.
"இரு தினங்களுக்கு முன்பு அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியபோது 20 தொழிலாளர்கள் பேருந்துக்காக காத்திருப்பதைக் கண்டேன். அவர்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவில்லை.
"சிலர் தங்கள் தாடைக்குக் கீழே அதைத் தொங்க விட்டிருந்தனர். ஓரிருவர் முகக் கவசமே அணிந்திருக்கவில்லை. இதேபோன்ற நிலைமை பணியிடங்களிலும் நிலவக்கூடும். இதனால் தொற்று அதிகரிக்கும். SOPகளைப் புறக்கணித்தால் தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்த முடியாது," என்றார் துன் மகாதீர்.