நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி மையம் திங்கள்கிழமை திறக்கப்படுகிறது


கோலாலம்பூர்:

நாட்டின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி மையம் திங்கள்கிழமை திறக்கப்படுகிறது.

மலேசிய அனைத்துலக வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தில் அமைந்துள்ள (Mitec) இந்த தடுப்பூசி மையத்தில் தினந்தோறும் 5 ஆயிரம் தனி நபர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

முதற்கட்டமாக 2600 மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

51 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த மையத்தில் தொடக்க நிலையில் 5 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் பின்னர் இந்த அன்றாட எண்ணிக்கை 8 ஆயிரம் தனி நபர்களாக அதிகரிக்கக்கூடும் என்றும் MITEC தற்காலிக தலைமைச் செயல் அதிகாரி மாலா துரைசாமி தெரிவித்துள்ளார்.

மேலும், மாற்றுத் திறனாளிகளுக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கான வசதிகளும் இம்மையத்தில் உள்ளது என்றும் மருத்துவ மற்றும் நிகழ்ச்சி மேலாண்மை பணியாளர்கள் அனைத்தும் நல்லபடியாக நடைபெறுவதை உறுதி செய்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஏற்கெனவே முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் மையத்துக்குள் வர ஒரே ஒரு நுழைவாயில் மட்டுமே திறந்திருக்கும் என்றும் மாலா துரைசாமி மேலும் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset