நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மே 27, மே 28: LRT, MRT ரயில்களில் பயணம் செய்தவர்கள் பரிசோதனை செய்து கொள்வது நல்லது

கோலாலம்பூர்:

கடந்த வியாழன் (மே 27), வெள்ளி (மே 28) ஆகிய இரு தினங்களிலும் எல்.ஆர்.டி. மற்றும் எம்.ஆர்.டி. ரயில்களில் அதிக கூட்டம் இருக்கும் காலை வேளையில் பயணம் செய்த அனைவரும் கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ளுமாறு Prasarana அறிவுறுத்தி உள்ளது.
அவ்விரு ரயில் சேவைகளைப் பயன்படுத்திய  இருவர் தங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தாமாக முன்வந்து தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட அந்த இரு பயணிகளும் மே 27, 28 தேதிகளில் தாங்கள் எல்.ஆர்.டி, எம்.ஆர்.டி. ரயில்களில் பயணம் மேற்கொண்ட பிறகு தங்களுக்கு கொவிட் 19 கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகக் கூறியுள்ளனர்.

இருவரில் ஒருவரான கிளாடியா Claudia கடந்த 21ஆம் தேதிதான் முதல் தவணையாக ஃபைசர் தடுப்பூசியை போட்டுக் கொண்டதாகவும் தொற்று ஏற்பட்டதற்கான எந்த அறிகுறியையும்  தாம் உணரவில்லை என்றும் கூறியுள்ளார்.

மற்றொரு பயணியான Nurul Aishyah  தமது டுவிட்டர் பதிவு ஒன்றில் 27ஆம் தேதியன்று எல்.ஆர்.டி. ரயிலில் தாமன் மெலாத்தியில் இருந்து கே.எல்.சி.சி. வரை பயணம் செய்ததாகவும், தன்னைப் போலவே பயணம் மேற்கொண்ட சக பயணிகள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்வது நல்லது என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மே 27ஆம் தேதி காலை 8 மணியிலிருந்து 9 மணிக்குள் இவர் ரயில் பயணம் மேற்கொண்டதாக Prasarana தெரிவித்துள்ளது. அதேபோல் மே 28ஆம் தேதி காலை 7.30 முதல் 8.30 மணிக்குள் Claudia ரயிலில் பயணம் செய்ததாகவும் Prasarana மேலும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset