
செய்திகள் மலேசியா
மலேசிய வான்வெளியில் இஸ்ரேல் விமானம் பறந்தது; எனினும் அச்சுறுத்தல் இல்லை: புத்ராஜெயா விளக்கம்
புத்ராஜெயா:
மலேசிய வான்வெளியில் இஸ்ரேல் நாட்டு விமானம் பிரவேசித்ததை புத்ராஜெயா உறுதி செய்துள்ளது.
எனினும் அது நீண்ட நேரம் மலேசிய வான்பரப்பில் இருக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தி உள்ளது.
அண்மையில் இஸ்ரேலிய உளவு விமானம் ஒன்று சிங்கப்பூரில் தரை இறங்கியதாகவும், இத்தகைய செயல்பாடு மலேசியாவுக்கான மறைமுக மிரட்டலாகக் கருதப்படுவதாகவும் ஒரு செய்தி வெளியானது.
இந்நிலையில் மலேசிய வான்பரப்பில் இஸ்ரேல் விமானம் பறந்தது உண்மைதான் என போக்குவரத்து அமைச்சு உறுதி செய்துள்ளது.
அதேவேளையில் அந்த விமானம் மலேசிய வான்பரப்பில் நுழைந்த பின்னர் அசாதாரணமான செயல்பாடுகள் ஏதும் தென்படவில்லை என்றும் நீண்ட நேரம் மலேசிய வான்பரப்பில் அந்த விமானம் இருக்கவில்லை என்றும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேலுக்குச் சொந்தமான அந்த விமானம் ஒரு பயணிகள் விமானம். மேலும் வழக்கமாக எந்த சிவில் விமானமும் பயன்படுத்தக்கூடிய வர்த்தக விமான வழித்தடத்தைத்தான் இஸ்ரேல் விமானமும் பயன்படுத்தியது. மேலும் அனைத்துலக விமானப் போக்குவரத்து அமைப்பு வரையறுத்துள்ள விதிகளின்படியே அந்த விமானம் செயல்பட்டது.
"அந்த விமானம் மாலத்தீவில் புறப்பட்டு சிங்கப்பூரைச் சென்றடைந்துள்ளது. மேலும் நாட்டின் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் எந்தவித அச்சுறுத்தல்களும இல்லை என்பதை உறுதி செய்த பிறகே இவ்வாறான விமானங்கள் பறப்பதற்கு அனுமதி அளிக்கப்படும்," என்று போக்குவரத்து அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
July 30, 2025, 11:15 pm
13ஆவது மலேசியத் திட்டத்தை பிரதமர் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்
July 30, 2025, 10:27 pm
மித்ராவுக்கு தெரிவிக்காமல் 16 திட்டங்களுக்கு பிரதமர் இலாகா நிதி ஒப்புதல் அளித்துள்ளது?
July 30, 2025, 10:22 pm
காதலனின் தாயைக் கொலை செய்ததாக பெண் ஒருவர் மீது குற்றச்சாட்டு
July 30, 2025, 10:19 pm
துன் மகாதீரின் பிள்ளைகள் செல்வத்தின் மூலாதாரம் குறித்து விளக்க வேண்டும்: பிரதமர்
July 30, 2025, 4:03 pm
தேவக்ஷேனின் இறுதிச் சடங்கு சோகமான சூழலில் நடைபெற்றது
July 30, 2025, 4:01 pm