
செய்திகள் மலேசியா
இன்று நாட்டின் ஒட்டு மொத்த தொற்று எண்ணிக்கை பாதிப்பு 6,999
கோலாலம்பூர்:
இன்று சுகாதார அமைச்சு வெளியிட்ட கோவிட் 19 தொற்றுச் சம்பவங்கள் சற்றே குறைந்து காணப்படுகின்றன. இந்த எண்ணிக்கை ஆறுதல் அளிக்காவிட்டாலும் இன்றைய எண்ணிக்கை போல் படிப்படியாக குறையும் என்று நம்பிக்கையத் தந்திருக்கிறது.சிலங்கூர் இன்றும் கொரோனா தொற்று எண்ணிக்கையில் முதல் இடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் 2477 தொற்றுகள் இன்று பதிவாகி இருக்கின்றன.
இரண்டாவது இடத்தில் இன்று கூட்டரசுப் பிரதேசம் கோலாலும்பூர் 616 பேருடன் இருக்கின்றது.கிளந்தான் 612 பேருடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் சரவாக் 513 பேருடன் இருக்கின்றது.
ஜோஹோர் 433, கெடா 422, பினாங்கு 248, பஹாங் 239, திரெங்கானு 214, பேராக் 212, மலாக்கா 202, சபா 190, லாபுவான் 133, புத்ராஜெயா 13, பெர்லிஸ் 7 தொற்றுக்கு இலக்காகி இருக்கின்றனர்.
இவ்வாறு இன்றைய நிலவரத்தை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.