
செய்திகள் மலேசியா
மக்கள் அனைவரின் பொறுமையால் தான் நாடு மீள முடியும்; இது ஓர் அறப்போர்; தியாகங்களைச் செய்வதே தற்போதைய தேவை: இஸ்மாயில் சப்ரி உருக்கமான வேண்டுகோள்
கோலாலம்பூர்:
MCO:3 முழு அளவிலான முடக்க நிலையின்போது மாவட்டங்கள், மாநிலங்கள் இடையிலான பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மூத்த அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகூப் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மேற்கொண்டுள்ள இந்த ஊரடங்கு நடவடிக்கை வெற்றிபெற அனைத்துத் தரப்பினரும் சற்று பொறுமை காக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
"ஒவ்வொரு தனி நபரும் பல தியாகங்களைச் செய்வதே தற்போதைய சூழ்நிலையில் அவசியமாகிறது. சிலர் தங்கள் வியாபாரத்தை தற்காலிகமாக நிறுத்தவேண்டி இருக்கும். சிலர் இரு வாரங்களுக்குத் தங்களது தொழிற்சாலைகளை மூடவேண்டி இருக்கும்.
"இருவேறு தூரப் பகுதிகளில் வசித்து வரும் திருமணமான தம்பதியர் மாவட்டம் அல்லது மாநிலங்களைக் கடந்து செல்ல அனுமதி கிடையாது. அவர்களும் அடுத்த இரு வாரங்களுக்கு பொறுமை காக்க வேண்டும்," என்று இன்றைய செய்தியாளர்கள் கூட்டத்தில் அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகூப் கேட்டுக் கொண்டார்.
மக்கள் அனைவரின் பொறுமையால் தான் நாடு மீள முடியும்; இது ஓர் அறப்போர்; தியாகங்களைச் செய்வதே தற்போதைய தேவை.
இதேவேளையில் இறப்பு நிகழ்வு அல்லது ஆபத்தான உடல்நிலையில் உள்ள குடும்ப உறுப்பினர்களைச் சந்திப்பது ஆகியவற்றுக்கு அரச மலேசிய போலீஸ் படையின் அனுமதியுடன் பயணங்களை மேற்கொள்ள இயலும் என அவர் தெளிவுபடுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
July 30, 2025, 11:15 pm
13ஆவது மலேசியத் திட்டத்தை பிரதமர் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்
July 30, 2025, 10:27 pm
மித்ராவுக்கு தெரிவிக்காமல் 16 திட்டங்களுக்கு பிரதமர் இலாகா நிதி ஒப்புதல் அளித்துள்ளது?
July 30, 2025, 10:22 pm
காதலனின் தாயைக் கொலை செய்ததாக பெண் ஒருவர் மீது குற்றச்சாட்டு
July 30, 2025, 10:19 pm
துன் மகாதீரின் பிள்ளைகள் செல்வத்தின் மூலாதாரம் குறித்து விளக்க வேண்டும்: பிரதமர்
July 30, 2025, 4:03 pm
தேவக்ஷேனின் இறுதிச் சடங்கு சோகமான சூழலில் நடைபெற்றது
July 30, 2025, 4:01 pm