
செய்திகள் மலேசியா
கார்களில் இருவர் மட்டுமே செல்ல முடியும்
புத்ராஜெயா:
MCO:3, காலபட்டத்தில் கார்களில் இருவர் மட்டுமே பயணம் மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தங்கள் வசிப்பிடப் பகுதிகளில் 10 கிலோமீட்டர் தூரத்துக்குட்பட்ட சுற்றுப் பரப்பில் மட்டுமே பயணம் மேற்கொள்ள இயலும் என்றும் அரசு இன்று தெரிவித்துள்ளது.
முழு முடக்க காலத்தில் பயணம் மேற்கொள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதிகமான மக்கள் கார்களில் பயணம் மேற்கொள்வதால் அரசாங்கம் அதில் கவனம் செலுத்துகிறது.
அத்தியாவசியப் பொருட்களை வாங்க வெளியே செல்லும்போது ஒரு வீட்டைச் சேர்ந்த இருவர் மட்டுமே வெளியேற அனுமதிக்கப்படுவர் என்று மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
கடைகள், அத்தியாவசிய துறைகள் உள்ளிட்ட அனைத்துமே இரவு 8 மணிக்கு மேல் செயல்பட இயலாது என்றும் கடைகள் மூடப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்ட அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகூப், இரவு 8 மணிக்குப் பின்னர் மக்கள் வெளியே செல்லவேண்டாம் என கேட்டுக் கொண்டார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் உள்ள நாட்களில் மாவட்டம், மாநில எல்லைகளைக் கடப்பதற்கு பல்வேறு துறை சார்ந்தவர்கள் அவற்றுடன் தொடர்புடைய அமைச்சுகளில் அனுமதி கடிதங்கள் கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தினார்.
மேலும் MITI, அனைத்துல வாணிபத் தொழில் துறை அமைச்சு அளித்துள்ள அனைத்து அனுமதி கடிதங்களும் மே 31ஆம் தேதிக்குப் பிறகு செல்லுபடியாகாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
July 30, 2025, 4:03 pm
தேவக்ஷேனின் இறுதிச் சடங்கு சோகமான சூழலில் நடைபெற்றது
July 30, 2025, 4:01 pm
தேவக்ஷேன் மரணத்தால் மனமுடைந்த தாயார் தற்கொலை முயற்சி
July 30, 2025, 8:38 am
ஆசிரியர் குத்தப்பட்ட வழக்கின் விசாரணைக்கு உதவ 14 வயது மாணவன் கைது: போலிஸ்
July 30, 2025, 8:36 am