
செய்திகள் மலேசியா
கடும் நெருக்கடியில் சரவாக் மருத்துவமனை: துணை முதல்வர் கவலை
கூச்சிங்:
சரவாக் மாநிலத்தில் உள்ள கப்பீட் மருத்துவமனையில் நோயாளிகளை மேற்கொண்டு சிகிச்சைக்காக அனுமதிப்பதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அதன் துணை முதல்வர் டான்ஸ்ரீ ஜேம்ஸ் மாசிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஏற்பட்டதைப் போன்ற ஒரு கடும் நெருக்கடியான சூழலை கப்பீட் மருத்துவமனை எதிர்கொண்டுள்ளதாகவும் அங்குள்ளதீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள படுக்கைகள் கிட்டத்தட்ட நிரம்பி விட்டதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
எனவே, கூட்டரசுப் பிரதேச சுகாதார அமைச்சு ஏதேனும் செய்து மருத்துவமனைக்கு உதவவேண்டும் என்று டான்ஸ்ரீ ஜேம்ஸ் மாசிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"முன்களப் பணியாளர்கள், தாதியர், மருத்துவர்கள் என அம்மருத்துவமனையில் உள்ள அனைவரும் சோர்ந்து விட்டனர். இந்தியாவில் எவ்வாறு மருத்துவமனைகளில் பலர் இறந்து போயினரோ அதுபோன்ற ஒரு நிகழ்வை கப்பீட் மருத்துவமனையிலும் மிக விரைவில் பார்க்க நேரிடலாம்.
"கப்பீட் மருத்துவமனை மட்டுமல்லாமல் சரவாக்கில் உள்ள ஏனைய மருத்துவமனைகள் மற்றும் மக்களை கொரோனா பெருந்தொற்று நெருக்கடியில் இருந்து காப்பாற்ற தடுப்பூசி மட்டுமே உதவும்.
"தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்ய சரவாக் அரசாங்கத்திடம் போதுமான நிதி ஆதாரம் உள்ளது. எனவே மனித உயிர்களைக் காப்பாற்ற தடுப்பூசி திட்டத்தை வேகப்படுத்த வேண்டும்," என்றார் டான்ஸ்ரீ ஜெம்ஸ் மாசிங்.
கோவிட்-19 நோய்க்கு மக்கள் பலியாவது தொடர்பான விவரங்களைக்க ஏட்கும்போது கடும் அதிர்ச்சி ஏற்படுவதாக குறிப்பிட்ட அவர், தனக்கு நெருக்கமானவர்கள் கூட நோய்க்கு பலியாகி இருப்பதாக தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
July 30, 2025, 11:15 pm
13ஆவது மலேசியத் திட்டத்தை பிரதமர் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்
July 30, 2025, 10:27 pm
மித்ராவுக்கு தெரிவிக்காமல் 16 திட்டங்களுக்கு பிரதமர் இலாகா நிதி ஒப்புதல் அளித்துள்ளது?
July 30, 2025, 10:22 pm
காதலனின் தாயைக் கொலை செய்ததாக பெண் ஒருவர் மீது குற்றச்சாட்டு
July 30, 2025, 10:19 pm
துன் மகாதீரின் பிள்ளைகள் செல்வத்தின் மூலாதாரம் குறித்து விளக்க வேண்டும்: பிரதமர்
July 30, 2025, 4:03 pm
தேவக்ஷேனின் இறுதிச் சடங்கு சோகமான சூழலில் நடைபெற்றது
July 30, 2025, 4:01 pm