செய்திகள் மலேசியா
40 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான உதவித்திட்டத் தொகுப்பு: அறிவித்தார் பிரதமர்
புத்ராஜெயா:
நாட்டில் MCO3.0 நடமாட்டக் கட்டப்பாட்டு ஆணை நாளை அமலுக்கு வரும் நிலையில் 40 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான உதவித்திட்டத் தொகுப்பு ஒன்றை பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் இன்று அறிவித்துள்ளார்.
இந்த நிவாரண உதவித் தொகுப்பின் மூலம் நாட்டு மக்களுக்கும் வர்த்தக துறைக்கும் உதவ அரசாங்கம் முன்வந்துள்ளதாக இன்று தொலைக்காட்சி வழி நாட்டு மக்களிடையே உரையாற்றும்போது பிரதமர் குறிப்பிட்டார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் மூலம் முழு முடக்கநிலை தற்போது நிலவுவதால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய B40 பிரிவினர் தங்களுடைய வங்கிக் கடனைத் திரும்பச் செலுத்துவது மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.
மேலும் Moratorium பெற உரிய தகுதி உடையவர்கள் தங்களது கடன்களுக்கான தவணைத் தொகையை 50 விழுக்காடு வரை குறைத்து தொகையைச் செலுத்தலாம் என்றும் இத்தகைய சலுகை 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்றும் பிரதமர் தமது உரையில் குறிப்பிட்டார்.
பொதுமக்களுக்கான கூடுதல் பிரிஹாப்பின் உதவித் தொகையை வழங்க அரசாங்கம் முன்வந்திருப்பதாக குறிப்பிட்ட பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின், இதற்காக 120 கோடி ரிங்கிட் தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ஒவ்வொரு குடும்பத்தின் வருமானத்தின் அடிப்படையில் இந்த உதவித் தொகையைப் பெறக்கூடிய தகுதி உடையவர்கள் குறைந்தபட்சம் 100ரிங்கிட்டில் இருந்து அதிகபட்சமாக 500 ரிங்கிட் வரை பெறமுடியும் என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.
மேலும், இந்த உதவித் தொகையானது ஜூன் மாத இறுதிக்குள் தகுதியானவர்களின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், டெக்ஸி ஓட்டுநர்களுக்கான கடன் தவணைச் சலுகையானது 12 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்றார்.
மேலும் டெக்ஸி, பேருந்து, E-hailing ஓட்டுநர்கள் 500 ரிங்கிட் உதவித் தொகையை ஒரு தவணை மட்டும் பெறுவார்கள் என்று குறிப்பிட்ட பிரதமர், இவையனைத்தும் pemerkasa உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படுவதாக கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 11:12 pm
ஜொகூர் மிருகக்காட்சி சாலை அருகே போலிசார் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்
October 8, 2026, 11:11 pm
ஆலய சிலை உடைப்பு; போலிஸ் உடனடி விசாரணை நடத்த வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்
October 8, 2026, 11:09 pm
சிரம்பான் நகரில் தீபாவளி சந்தை; நமது பாரம்பரிய அடையாளத்தை விட்டுக் கொடுக்க முடியாது: டத்தோ மோகன்
October 8, 2026, 9:01 pm
புகைமூட்டம்: நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் மூடப்படும்
October 8, 2026, 4:08 pm
காற்று மாசுபாடு குறியீடு 150 முதல் 180 வரை இருந்தால் பள்ளிகளை மூட மாமன்னர் உத்தரவு
October 8, 2026, 4:07 pm
கேஎல்ஐஏ சம்பவம் தொடர்பான விசாரணை ஆவணங்களை சட்டத்துறை தலைவர் அலுவலகம் போலிசாரிடம் திருப்பி அளித்தது
October 8, 2026, 4:06 pm
