செய்திகள் மலேசியா
கலைஞர், கல்வியாளர், தொழில்முனைவோர் என்று பல பரிணாமம் கொண்ட லிம் கோக் விங் காலமானார்
பெட்டாலிங் ஜெயா:
கலைஞர், தொழில்முனைவோர், கல்வியாளர் என்று ஆளுமை மிக்க லிம் கோக் விங் இன்றுதனது 75ஆம் வயதில் காலமானார்.
லிம்மின் உதவியாளர் இன்று இதை உறுதிப்படுத்தினார், ஆனால் கூடுதல் விவரங்களை வழங்க மறுத்துவிட்டார்.
கடந்த வாரம், லிம் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இருந்தது என்று தெரிவிக்கப்பட்டது.
லிம் ஒரு வரைகலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், மலேசியா மற்றும் சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட பல காமிக் தொடர்களின் பிதாமகனாக அவர் இருந்தார்.
விளம்பரத்துறையிலும் அவர் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி செம்மையாக செயல்பட்டார். விளம்பரத்துறையில் சொந்த நிறுவனமான விங்ஸ் கிரியேட்டிவ் கன்சல்டன்ட்ஸ் 1975 ஆம் ஆண்டு தொழில்முறை மலேசிய நிறுவனமாகத் தொடங்கினார்.
மூன்று ஆண்டுகளுக்குள், இந்நிறுவனம் நாட்டின் தலைசிறந்த ஏஜென்சிகளில் ஒன்றாக மாறியது, 1988 ஆம் ஆண்டில், இது உலகின் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களில் ஒன்றான உலகளாவிய நிறுவனங்களான பிபிடிஓவுடன் கூட்டுசேர்ந்தது.
1991 ஆம் ஆண்டில், லிம் கல்விதுறையின் மீது தனது கவனத்தைத் திருப்பினார், லிம்கோக்விங் இன்ஸ்டிடியூட் ஆப் கிரியேட்டிவ் டெக்னாலஜி நிறுவப்பட்டது, இது 2002 ஆம் ஆண்டில் பல்கலைக்கழகக் கல்லூரியாக அங்கீகரிக்கப்பட்ட முதல் தனியார் கல்லூரியாகும். பின்னர் இது லிம்கோக்விங் யுனிவர்சிட்டி ஆஃப் கிரியேட்டிவ் டெக்னாலஜி என மறுபெயரிடப்பட்டது.
இன்று அவரது பல்கலைக்கழகம் உலகளாவிய அங்கீகாரத்தை அடைந்துள்ளது, லிம்கோக்விங் பெயர் உலகின் பிற பகுதிகளுக்கு அதன் சிறகுகளை பரப்பியது.
சைபர்ஜயாவில் அதன் முதன்மை வளாகம் தோன்றி அதன் கிளைகளை அது சரவாக், கம்போடியா, போட்ஸ்வானா, சியரா லியோன் மற்றும் இங்கிலாந்து ஆகிய இடங்களுக்கும் பரப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது,
ஒரு சிறந்த படைப்பாளியை மலேசியா இழந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 5:25 pm
மலாக்கா மாநில ஆளுநர் பிறந்தநாள்: கல்வி அமைச்சர் FADLINA SIDEKக்கிற்கு டத்தோஸ்ரீ பட்டம்
August 24, 2026, 5:03 pm
திரைப்படத் துறை சார்ந்தவர்களை ஃபினாஸ் அழைக்கிறது; குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்: அஸ்மிர்
August 24, 2026, 4:56 pm
மஸ்ஜித் இந்தியா முஸ்லிம் சுங்கை சிப்புட் இளைஞர் பிரிவின் மெர்டேக்கா நடைபயணம்
August 24, 2026, 4:44 pm
மெர்டேக்கா சதுக்கத்தில் தேசிய தின உரையை பிரதமர் அன்வார் நிகழ்த்துகிறார்
August 24, 2026, 4:08 pm
பள்ளி விடுமுறை, தேசிய விடுமுறை நாட்களுக்காக கே.டி.எம் 8 உத்தாரா ரயில் சேவைகளை வழங்குகிறது
August 24, 2026, 4:03 pm
