
செய்திகள் மலேசியா
ஊரடங்கின் போது மதுபான தொழிற்சாலைகளோ கடைகளோ இயங்க அனுமதிக்கப்படவில்லை: இஸ்மாயில் சப்ரி
புத்ராஜெயா:
திங்கள்கிழமை (ஜூன் 1) முதல் தொடங்கிய நாடு தழுவிய முழு ஊரடங்கின்போது மதுபானத் தொழிற்சாலை இயங்க அனுமதிக்கப்படாது.
மூத்த அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகூப் கூறுகையில், உற்பத்தித் துறையில் 12 பிரிவுகளைத் தவிர பிற அனைத்து துறைகளும் இந்த காலகட்டத்தில் மூடப்படும்
"உணவு மற்றும் பானம் உற்பத்தி செய்யும் தொழில் துறையில் உள்ள தொழிற்சாலைகளுக்கு மட்டும் இயங்க வழங்கப்படுகிறது, ஆனால் அது அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்பவர்களுக்கு மட்டுமே.
"மதுபானம் அத்தியாவசிய பொருட்கள் பிரிவில் பட்டியலிடப்படவில்லை.
"எனவே, நாடு முழுவதும் மதுபானக் கடைக்களும் அதன் உற்பத்தி தொழிசாலைகளும் உடனடியாக மூடப்பட வேண்டும் என்று அரசாங்கம் இன்று ஒப்புக் கொண்டுள்ளது," என்று அவர் கூறினார்.
"நடமாட்ட இயக்கக் கட்டுப்பாட்டு காலத்தில், முழு ஊரடங்கு அமலில் இருக்கும் ஜூன் 14 வரை இது எதுவும் செயல்படாது என்று உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.
"17 அத்தியாவசிய சேவைகளைத் தவிர்த்து, அனைத்து பொருளாதார மற்றும் சமூக நடவடிக்கைகள் செயல்பட அனுமதி இல்லை என்பதை திட்டவட்டமாக அரசாங்கம் முடிவெடுத்துள்ளது" என்று அமைச்சர் இஸ்மாயில் சபரி தெரிவித்தார்.