
செய்திகள் மலேசியா
ஒரு மில்லியனுக்கும் அதிகமானோருக்கு இரு தவணைகள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது
கோலாலம்பூர்:
நாட்டில் இதுவரை ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் (1,080,568) இரு தவணைகள் தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
1,927,861 எண்ணிக்கையிலான தனி நபர்கள் ஒருமுறை மட்டும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்றும், இதன்மூலம் நாடு முழுவதும் சுமார் 3 மில்லியன் (3,008,429) பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
ஆக அதிகமாக சிலாங்கூரில் 141,622 பேரும், சரவாக் மாநிலத்தில் 111,037 பேரும், பேராக்கில் 101,400 பேரும், கோலாலம்பூரில் 96,834 பேரும், ஜொகூரில் 95,680 பேரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் என சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதம் பாபா கூறினார்.
இந்த ஆண்டுஇறுதிக்குள் மலேசியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டுவிட வேண்டும் என்பதை அரசாங்கம் இலக்காக கொண்டுள்ளது.
அதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக தேசிய தடுப்பூசித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரான அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
July 30, 2025, 11:15 pm
13ஆவது மலேசியத் திட்டத்தை பிரதமர் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்
July 30, 2025, 10:27 pm
மித்ராவுக்கு தெரிவிக்காமல் 16 திட்டங்களுக்கு பிரதமர் இலாகா நிதி ஒப்புதல் அளித்துள்ளது?
July 30, 2025, 10:22 pm
காதலனின் தாயைக் கொலை செய்ததாக பெண் ஒருவர் மீது குற்றச்சாட்டு
July 30, 2025, 10:19 pm
துன் மகாதீரின் பிள்ளைகள் செல்வத்தின் மூலாதாரம் குறித்து விளக்க வேண்டும்: பிரதமர்
July 30, 2025, 4:03 pm
தேவக்ஷேனின் இறுதிச் சடங்கு சோகமான சூழலில் நடைபெற்றது
July 30, 2025, 4:01 pm