
செய்திகள் மலேசியா
தென்னாப்பிரிக்க உருமாறிய கொரோனா: சுகாதார அமைச்சு எச்சரிக்கை
கோலாலம்பூர்:
தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகை மலேசியாவிலும் பரவியுள்ள நிலையில், மக்கள் அதிக கவனத்துடன் இருக்கவேண்டும் என சுகாதார அமைச்சு அறிவுறுத்தி உள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தென்னாப்பிரிக்க கொரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளதாக அந்த அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.
இந்த உருமாறிய கொரோனா வகை சமூக அளவில் அதிகம் பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ள அவர், B.1.351 என்று குறிப்பிடப்படும் கொரோனா திரிபு வேகமாகப் பரவும் தன்மை கொண்டது என்றார்.
இத்தகைய கொரோனா திரிபுகள் தொடர்பான சூழ்நிலையை ஒவ்வொரு தனிநபரும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மலேசியாவில் ஏற்கெனவே இந்திய கொரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளது. அதேவேளையில் வியட்நாமில் காற்றில் பரவக்கூடிய தன்மை கொண்ட உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வகைத் திரிபு மலேசியாவுக்குள் இன்னும் ஊடுருவவில்லை என டாக்டர் நூர் ஹிஷாம் மேலும் தெரிவித்துள்ளார்.
புதிய கொரோனா திரிபுகள் மலேசியாவில் பரவாமல் இருக்க நாட்டின் எல்லைப் பகுதிகளில் பரிசோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் அண்மையில் கூறியிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
July 30, 2025, 11:15 pm
13ஆவது மலேசியத் திட்டத்தை பிரதமர் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்
July 30, 2025, 10:27 pm
மித்ராவுக்கு தெரிவிக்காமல் 16 திட்டங்களுக்கு பிரதமர் இலாகா நிதி ஒப்புதல் அளித்துள்ளது?
July 30, 2025, 10:22 pm
காதலனின் தாயைக் கொலை செய்ததாக பெண் ஒருவர் மீது குற்றச்சாட்டு
July 30, 2025, 10:19 pm
துன் மகாதீரின் பிள்ளைகள் செல்வத்தின் மூலாதாரம் குறித்து விளக்க வேண்டும்: பிரதமர்
July 30, 2025, 4:03 pm
தேவக்ஷேனின் இறுதிச் சடங்கு சோகமான சூழலில் நடைபெற்றது
July 30, 2025, 4:01 pm