
செய்திகள் மலேசியா
கர்ப்பிணிகள், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இப்போது மைசெஜ்தெராவில் கோவிட் -19 தடுப்பூசியைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு: கைரி
கோலாலம்பூர்:
கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இப்போது MySejahtera செயலி மூலம் அவர்களின் நிலை குறித்த கூடுதல் தகவல்களை வழங்கலாம். அவர்களுக்கு மிகவும் பொருத்தமான கோவிட் -19 தடுப்பூசிகளைத் தேர்ந்தெடுக்க சுகாதார அதிகாரிகளை அனுமதிக்கலாம் என்று அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்தார்.
அவர் தனது ட்விட்டர் பதிவில், தேசிய கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின்படி தற்போது தாய்மார்கள் தங்களது நிலைக்கு ஏற்ற தடுப்பூசிகளைப் பெற முடியும். அவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் பிரசவ மாதத்தினை தெரிவித்து தடுப்பூசி போட முடியும். மேலும், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தங்களுக்குரிய தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளும் நிலையை அரசு ஏற்பாடு செய்திருக்கிறது.
"உங்கள் நியமனம் ஒரு குறிப்பிட்ட பிபிவி-யில் உங்களுக்கு ஏற்ற தடுப்பூசியின் அடிப்படையில் இருக்கும்," என்று அவர் கூறினார்.
கர்ப்பிணி மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு கோவிட் -19 தடுப்பூசிக்கு பதிவு செய்ய மைசெஜ்தெரா செயலியின்கீழ் புதிய அம்சம் தொடங்கப்படும் என்று மே 24 அன்று கைரி அறிவித்தார்.
கர்ப்பிணி மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தடுப்பூசிக்குச் செல்வதற்கு முன்பு தங்கள் மருத்துவர்களை அணுகுமாறு இதுவரை அறிவுறுத்தப்பட்டிருந்தாலும், கர்ப்ப காலத்தின் 14 லிருந்து 33 வாரங்களுக்குள் தடுப்பூசி கொடுக்கப்பட வேண்டுமா என்று ஒரு வழிகாட்டுதலும் வெளியிடப்பட்டுள்ளது.
"கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களை அடையாளம் காண, மைசெஜ்தெராவில் ஒரு புதிய அம்சம் இந்த வார இறுதியில் அறிமுகப்படுத்தப்படும்," என்று அவர் சுகாதார அமைச்சகத்துடன் ஒரு கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.