
செய்திகள் மலேசியா
செப்டம்பருக்குள் மலேசியாவில் மரண எண்ணிக்கை 26 ஆயிரமாக அதிகரிக்கக்கூடும்
கோலாலம்பூர்:
மலேசியாவில் கொரோனா கிருமித் தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கை வரும் செப்டம்பர் மாதத்துக்குள் 26 ஆயிரமாக அதிகரிக்கக்கூடிய ஆபத்து உள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் அறிவியல் மன்ற உறுப்பினரான பேராசிரியர் Prof Datuk Dr Adeeba Kamarulzaman கூறியுள்ளார்.
தற்போதுள்ள ஒட்டுமொத்த மரண எண்ணிக்கையைவிட 9 மடங்கு மரணங்கள் பதிவாகக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் Health Metric & Evaluation மையம் (IHME) மேற்கொண்ட ஆய்வின்போது மலேசியாவில் அன்றாடம் பதிவாகும் தொற்றுப் பாதிப்பால் ஏற்படக்கூடிய மரண எண்ணிக்கையானது ஆகஸ்டு இறுதிக்குள் தினம் 200 மரணங்கள் என்பதாகப் பதிவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மலேசியாவில் மாரடைப்புக்கு அடுத்து அதிக மக்கள் உயிரிழக்க கொரோனாதான் முக்கியக் காரணம் என்றும் டத்தோ டாக்டர் அடிபா கமருள் ஸமான் கூறியுள்ளார்.
இந்த ஆய்வு தொடர்பான அனைத்து முக்கிய விவரங்களும் IHME இணையளத்தில் இடம்பெற்றுள்ளன. டாக்டர் அடிபா மலேசிய எய்ட்ஸ் ஃபவுண்டேஷனின் தலைவரும் ஆவார்.
கோவிட் 19க்கு எதிரான போராட்டத்தில் அனைத்து மலேசியர்களும் பங்குபெற வேண்டும் என்றும் தற்போது அமலில் உள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை 3.0 மிக முக்கியமான போராட்டக்களம் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒருவேளை MCO 5.0 வரும் அளவுக்கு நாம் செயல்பட்டோம் எனில் நம்மால் தாக்குப்பிடிக்க முடியாது என்றார் டாக்டர் அடிபா.
தொடர்புடைய செய்திகள்
July 30, 2025, 11:15 pm
13ஆவது மலேசியத் திட்டத்தை பிரதமர் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்
July 30, 2025, 10:27 pm
மித்ராவுக்கு தெரிவிக்காமல் 16 திட்டங்களுக்கு பிரதமர் இலாகா நிதி ஒப்புதல் அளித்துள்ளது?
July 30, 2025, 10:22 pm
காதலனின் தாயைக் கொலை செய்ததாக பெண் ஒருவர் மீது குற்றச்சாட்டு
July 30, 2025, 10:19 pm
துன் மகாதீரின் பிள்ளைகள் செல்வத்தின் மூலாதாரம் குறித்து விளக்க வேண்டும்: பிரதமர்
July 30, 2025, 4:03 pm
தேவக்ஷேனின் இறுதிச் சடங்கு சோகமான சூழலில் நடைபெற்றது
July 30, 2025, 4:01 pm