
செய்திகள் மலேசியா
பினாங்கு, சபா, பஹாங் ஆகிய மாநிலங்களில் வெள்ளிக்கிழமை முதல் EMCO
கோலாலம்பூர்:
பினாங்கு, சபா, பஹாங் ஆகிய மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் Emco எனப்படும் தீவிர நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை வெள்ளிக்கிழமை முதல் அமல்படுத்தப்படுகிறது.
இத் தகவலை இன்றைய செய்தியாளர்கள் கூட்டத்தில் மூத்த அமைச்சர் இஸ்மாயில் சபரி யாகூப் வெளியிட்டார்.
பினாங்கின் பாயான் லெபாஸ் பகுதி (Bayan Lepas Town) EMCO-வின் கீழ் வைக்கப்படும் என்றும் அப்பகுதியில் கடந்த சில தினங்களாக கோவிட் 19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து சுகாதார அமைச்சு இம்முடிவுக்கு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், Emco அமலுக்கு வரும் பகுதிகளின் பட்டியலையும் அவர் வெளியிட்டார்.
நாடு முழுவதும் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அமலில் உள்ளது என்றாலும், தொற்றுப் பாதிப்பு அதிகம் அல்லது குறைவாக உள்ளது என்ற அடிப்படையில் அரசாங்கம் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
அந்த வகையில் சில பகுதிகளில் சுகாதார அமைச்சின் பரிந்துரையின் பேரில் EMCO அமல்படுத்தப்படுவதாகத் தெரிகிறது. பினாங்கு, சபா மற்றும் பஹாங் மாநிலங்களிலும் அத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.