
செய்திகள் மலேசியா
மலேசியாவில் மொத்த கோவிட் -19 இறப்புகள் 3,000ஐத் தாண்டியது; கடந்த 24 மணி நேரத்தில் 104 புதிய இறப்புகள் பதிவாகின
கோலாலம்பூர்:
மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 103 இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில், நாட்டில் கோவிட் -19 மொத்த இறப்பு எண்ணிக்கை 3,000 ஐத் தாண்டியுள்ளது.
சுகாதார இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாஹ் இதுகுறித்து கூறுகையில், இறப்புகளைப் பொறுத்தவரை 100 க்கும் மேற்பட்ட இறப்பு என்பது இரண்டாவது நாளாக நிகழ்ந்துள்ளது. இந்தக் கொடிய நோய்க்கு மட்டும் இதுவரை 3,096 பேர் பலியாகி இருக்கின்றார்கள்.
தீவிர சிகிச்சை பிரிவுகளில் (ஐ.சி.யூ) சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இன்று மட்டும் 880 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள், நேற்று 878 பேர் என்ற உச்ச எண்ணிக்கையை இன்றைய எண்ணிக்கை தாண்டிச் சென்றுள்ளது.
"ஐ.சி.யுகளில் சிகிச்சை பெறும் 880 நோயாளிகளில், 446 பேர் வென்டிலேட்டர்கள் துணையுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்," என்று அவர் கூறினார்.