நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மரண எண்ணிக்கை 26 ஆயிரத்தை எட்டிப்பிடிப்பது சாத்தியமாகாத ஒன்றல்ல: ஆதம் பாபா கவலை

கோலாலம்பூர்:

மலேசியாவில் கொவிட் தொற்று மரணங்கள் 26 ஆயிரத்தை எட்டிப்பிடிப்பது சாத்தியமாகாத ஒன்றல்ல என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதம் பாபா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பல்கலைக்கழகத்தின் அண்மைய ஆய்வுப்படி, மலேசியாவில் கொவிட்-19 நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை செப்டம்பர் மாத இறுதிக்குள் 26 ஆயிரத்தை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கணிப்பு சாத்தியமாகக் கூடிய ஒன்றுதான் என்று ஆதம் பாபா கூறியுள்ளார்.

"நாட்டில் இதுவரை பதிவாகி உள்ள காரணம் கண்டறிய முடியாத தொற்றுச் சம்பவங்களில் சுமார் 60 விழுக்காடு மக்கள் நடமாட்டத்துடன் சம்பந்தப்பட்டுள்ளது. 40 விழுக்காடு தொற்றுத் திரள்களுடன் சம்பந்தப்பட்டுள்ளன.

"கொரோனா கிருமி மக்களைப் பின்தொடர்கிறது. மக்கள் நகரும்போது கிருமியும் நகர்கிறது.

பல்வேறு துறைகள் சார்ந்த நடவடிக்கைகள், ரமலான் மாத நடவடிக்கைகள் மற்றும் 'கூரியர்' (விரைவு தபால்) சேவையில் ஈடுபட்டுள்ள குழுக்கள் ஆகியவைதான் சமூக அளவிலான தொற்றுத்திரள்கள் ஏற்பட சில முக்கிய காரணிகள்," என்றார் ஆதம் பாபா.

14 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ள முழு முடக்க நிலை நல்ல பலன் தருவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக குறிப்பிட்ட அவர், நாடு முழுவதும் மாநில அரசாங்கங்கள் நடத்தும் தொற்றுப் பரிசோதனைகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டியுள்ளது என்றார்.

"எனினும் முழு முடக்க நிலையின்போது, பொதுமக்களின் ஒத்துழைப்பின்றி அரசாங்கத்தின் கிருமித்தொற்றுப் பரவல் நடவடிக்கை வெற்றி பெறாது. தேசிய சுகாதார கட்டமைப்பின் மீது அதிக அழுத்தம் ஏற்பட்டுள்ளது. அதை குறைக்கும் வகையில் அனைத்து தரப்பினரும் தங்கள் பங்களிப்பை அளிக்கும் பட்சத்தில் கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெற இயலும்," என்றார் அமைச்சர் ஆதம் பாபா.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset