
செய்திகள் மலேசியா
தாய்லாந்தில் உற்பத்தியாகும் அஸ்ட்ராஸெனகா தடுப்பூசிக்கு மலேசிய அரசு அனுமதி
புத்ராஜெயா:
தாய்லாந்தில் உற்பத்தியாகும் அஸ்ட்ராஸெனகா தடுப்பூசிக்கு நிபந்தனைகளுடன் கூடிய பயன்பாட்டு அனுமதியை மலேசிய அரசு வழங்கி உள்ளது.
இதையடுத்து நாட்டில் செயல்படுத்தப்படும் தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் இந்தத் தடுப்பூசி இடம்பெற்றுள்ளது.
அவசரகாலப் பயன்பாட்டுக்காக இத்தகைய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மலேசிய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்துடனான சந்திப்பின்போது இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.
இதன் மூலம் நாட்டில் தடுப்பூசி போடும் விகிதம் அதிகரிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதற்குமுன்பு நெதர்லாந்தைச் சேர்ந்த MedImmune (MEDIMMUNE) Pharma என்ற நிறுவனம் உற்பத்தி செய்யும் அஸ்ட்ராஸெனகா தடுப்பூசிக்கு மலேசிய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கி இருந்தது.
இக் குறிப்பிட்ட நிறுவனம் ஐரோப்பிய நாடுகளுக்கு தடுப்பூசிகளை விநியோகித்து வருகிறது.
இந் நிலையில் தாய்லாந்தில் உற்பத்தியாகும் அஸ்ட்ராஸெனகா தடுப்பூசிகளுக்கும் அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
July 30, 2025, 11:15 pm
13ஆவது மலேசியத் திட்டத்தை பிரதமர் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்
July 30, 2025, 10:27 pm
மித்ராவுக்கு தெரிவிக்காமல் 16 திட்டங்களுக்கு பிரதமர் இலாகா நிதி ஒப்புதல் அளித்துள்ளது?
July 30, 2025, 10:22 pm
காதலனின் தாயைக் கொலை செய்ததாக பெண் ஒருவர் மீது குற்றச்சாட்டு
July 30, 2025, 10:19 pm
துன் மகாதீரின் பிள்ளைகள் செல்வத்தின் மூலாதாரம் குறித்து விளக்க வேண்டும்: பிரதமர்
July 30, 2025, 4:03 pm
தேவக்ஷேனின் இறுதிச் சடங்கு சோகமான சூழலில் நடைபெற்றது
July 30, 2025, 4:01 pm