
செய்திகள் மலேசியா
446 சட்டத்தை மீறினால் நடவடிக்கை பாயும்: டத்தோஸ்ரீ சரவணன் எச்சரிக்கை
கோலாலம்பூர்:
உரிய வசதிகள் இல்லாத இடங்களில் தொழிலாளர்களை தங்கவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்துள்ளார்.
மனிதவளத் துறையின் அனுமதி இன்றி வசதியற்ற இடங்களில் தொழிலாளர்களை தங்க வைத்தால் நடவடிக்கை பாயும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய விதிமீறல் தொடர்பாக பல தொழில் நிர்வாகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டி உள்ள அமைச்சர், அந்நியத் தொழிலாளர்கள் சுகாதாரமான இடங்களில் தங்குவதற்கு தொழில் நிறுவனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
இதற்கேற்ப செயல்படாத நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
446 சட்டம் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதையும் MCO எனப்படும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடர்பான விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப் படுகின்றனவா என்றும் மனிதவள அமைச்சு கண்காணித்து வருகிறது.
இந் நிலையில் நீலாய் பகுதியில் உள்ள நிறுவனத்தில் நடத்தப்பட்ட ஆய்வுக்குப் பின்னர் அதன் மீது மனிதவள அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அந் நிறுவனத்தில் சுமார் 169 அந்நியத் தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாகவும், மொத்த தொழிலாளர்கள் எண்ணிக்கை 264 என்றும் தெரிய வந்துள்ளது.
இந் நிலையில் மனிதவளத்துறை, சுகாதார - பாதுகாப்புத்துறை, காவல்துறை ஆகியவை இணைந்து அந்நிறுவனத்தின் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்நிறுவனம் விதிமுறைகளை மீறியது தெரிய வந்துள்ளது.
446 ஆவது சட்டத்தை மீறிய தொழில் நிர்வாகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நீதிமன்ற நடவடிக்கையின் மூலம் 352,000 ரிங்கிட் அபராதம் வசூலிக்கக்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 10:58 pm
ஜோகூர் சோதனைச் சாவடியைக் கடக்க உதவும் QR குறியீடு
September 18, 2025, 10:19 pm
மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதீர்கள்; உணவகங்களில் புகைபிடிக்கும் தடையை கடைபிடியுங்கள்: பிரெஸ்மா
September 18, 2025, 10:17 pm
காணாமல் போன சபா மின்சாரத் துறை ஊழியர் கெனிங்காவில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்
September 18, 2025, 10:16 pm
இளைஞர்களின் குரல்களைக் கேளுங்கள்: ஆசியான் தலைவர்களுக்கு பிரதமர் வலியுறுத்து
September 18, 2025, 10:15 pm
கம்போங் சுங்கை பாரு மறுமேம்பாடு: சிலாங்கூர் சுல்தானின் நிலைப்பாட்டை அன்வார், ஹம்சா ஆதரித்தனர்
September 18, 2025, 10:14 pm
கம்போங் சுங்கை பாரு பிரச்சினை; மலாய்க்காரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
September 18, 2025, 2:45 pm
அமைச்சர் அறிக்கை வெளியிடுவதைத் தடுக்க சம்சுல் ஹரிசின் தாயாருக்கு இடைக்கால உத்தரவு
September 18, 2025, 2:43 pm
ஷாராவை பகடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பள்ளி மாற்றப்பட்டனர்
September 18, 2025, 2:40 pm