செய்திகள் மலேசியா
புதிய உச்சம்: ஒரே நாளில் லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது
கோலாலம்பூர்:
மலேசியாவில் நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது இந்த நடவடிக்கையில் புதிய உச்சம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் இந்தாண்டு இறுதிக்குள் மலேசியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதை அரசு இலக்காகக் கொண்டுள்ளது. அதற்கு ஏதுவாக அன்றாடம் போடப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை அரசுத்தரப்பு மேற்கொண்டுள்ளது.
இந் நிலையில் நேற்று 117,563 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இது கடந்த நூறு நாட்களுக்கு முன்னர் தடுப்பூசி திட்டம் துவங்கப்பட்டதிலிருந்து பதிவான ஆக அதிக எண்ணிக்கையாகும்.
இதன்மூலம் தடுப்பூசி போடும் திட்டம் வேகமெடுத்துள்ளதாகவும் மிக விரைவில் அன்றாடம் 150,000 தடுப்பூசிகள் போடப்பட வேண்டும் எனும் இலக்கை எட்டிப் பிடிக்க முடியும் என அரசுத்தரப்பு நம்புவதாகவும் தெரிகிறது.
மேலும், அதிக அளவில் தடுப்பூசி மையங்களை அமைப்பது, ஆயிரம் தனியார் கிளினிக்குகளை இதில் ஈடுபடுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் அரசு நிர்ணயித்துள்ள இலக்கு எட்டப்படும் என்று நம்புவதாக தடுப்பூசி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும் அமைச்சருமான கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
அன்றாடம் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற இலக்கும் விரைவில் சாத்தியமாகும் என்று அவர் கூறியுள்ளார்.
மலேசியாவில் தடுப்பூசி போடும் விகிதமானது இந்தோனேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைவிட மலேசியாவில் அதிகமாக உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 11:12 pm
ஜொகூர் மிருகக்காட்சி சாலை அருகே போலிசார் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்
October 8, 2026, 11:11 pm
ஆலய சிலை உடைப்பு; போலிஸ் உடனடி விசாரணை நடத்த வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்
October 8, 2026, 11:09 pm
சிரம்பான் நகரில் தீபாவளி சந்தை; நமது பாரம்பரிய அடையாளத்தை விட்டுக் கொடுக்க முடியாது: டத்தோ மோகன்
October 8, 2026, 9:01 pm
புகைமூட்டம்: நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் மூடப்படும்
October 8, 2026, 4:08 pm
காற்று மாசுபாடு குறியீடு 150 முதல் 180 வரை இருந்தால் பள்ளிகளை மூட மாமன்னர் உத்தரவு
October 8, 2026, 4:07 pm
கேஎல்ஐஏ சம்பவம் தொடர்பான விசாரணை ஆவணங்களை சட்டத்துறை தலைவர் அலுவலகம் போலிசாரிடம் திருப்பி அளித்தது
October 8, 2026, 4:06 pm
