
செய்திகள் மலேசியா
ஷாஃபி அப்தால், சையத் சாதிக்குடன் இணையத் தயார்: அன்வாரை ஒதுக்கிய மகாதீர்
கோலாலம்பூர்:
பெஜுவாங் கட்சிக்கு மலேசிய சங்கப் பதிவு இலாகாவின் அங்கீகாரம் இன்னும் கிடைக்கப் பெறவில்லை என துன் மகாதீர் முஹம்மது தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் அக்கட்சி தொடர்ந்து தனித்து இயங்கிவரும் என்று அவர் கூறினார்.
பெர்சாத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் தமது ஆதரவாளர்களுடன் சேர்ந்து பெஜுவாங் கட்சியை நிறுவியுள்ளார் துன் மகாதீர்.
இதையடுத்து தனது கட்சிக்கு அங்கீகாரம் அளிக்கக் கோரி சங்கப் பதிவு இலாகாவில் அவர் விண்ணப்பித்துள்ளார்.
இந் நிலையில் அடுத்த பொதுத் தேர்த்தில் மீண்டும் நம்பிக்கை கூட்டணியில் பெஜுவாங் கட்சி இணையுமா எனும் கேள்வி எழுந்துள்ளது.
ஆனால், அவ்வாறு இணைந்து செயல்படுவதில் தமக்கு ஆர்வம் இல்லை எனக் கூறியுள்ளார் மகாதீர்.
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் தலைமை ஏற்றுள்ள நிலையில் அவரைப்பற்றி அண்மைய சில மாதங்களில் பலமுறை கருத்துகளைத் தெரிவித்துள்ளார் மகாதீர்.
இதனால், இருதரப்புக்கும் இடையே அதிருப்தி நிலவி வருவதாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில் 15வது பொதுத் தேர்தல் வரை பெஜுவாங் தனித்து இயங்கும் என்றும் சங்கப் பதிவு இலாகாவின் அங்கீகாரத்துக்காக காத்திருக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஒருவேளை தங்களது எதிர்பார்ப்பின்படி சங்கப் பதிவு இலாகாவின் கிடைக்காமல் போகும் பட்சத்தில் பாரிசான் கட்சியுடனும் அதன் தலைவர் ஷாஃபி அப்தாலுடனும் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளதாக மகாதீர் கோடி காட்டினார்.
வாய்ப்பிருப்பின் சையத் சாதிக் தலைமையிலான மூடாக் கட்சியுடனும் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக துன் மகாதீர் மேலும் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
July 30, 2025, 11:15 pm
13ஆவது மலேசியத் திட்டத்தை பிரதமர் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்
July 30, 2025, 10:27 pm
மித்ராவுக்கு தெரிவிக்காமல் 16 திட்டங்களுக்கு பிரதமர் இலாகா நிதி ஒப்புதல் அளித்துள்ளது?
July 30, 2025, 10:22 pm
காதலனின் தாயைக் கொலை செய்ததாக பெண் ஒருவர் மீது குற்றச்சாட்டு
July 30, 2025, 10:19 pm
துன் மகாதீரின் பிள்ளைகள் செல்வத்தின் மூலாதாரம் குறித்து விளக்க வேண்டும்: பிரதமர்
July 30, 2025, 4:03 pm
தேவக்ஷேனின் இறுதிச் சடங்கு சோகமான சூழலில் நடைபெற்றது
July 30, 2025, 4:01 pm