நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தினமும் 12 ஆயிரம் பயண விண்ணப்பங்களுக்கு அனுமதி: உள்துறை அமைச்சு

புத்ராஜெயா:

MCO 3.0 அமலில் இருக்கும் இவ்வேளையில் மாவட்டங்கள், மாநிலங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள தினம்தோறும் 12 ஆயிரம் விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 1ஆம் தேதி முழு முடக்கநிலை அறிவிக்கப்பட்டது முதல் இவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சிர் டத்தோஸ்ரீ ஹம்ஸா ஸைனுதின் தெரிவித்துள்ளார்.  

இறப்பு, அவசரநிலை, சுய தொழில் செய்வோரிடமிருந்து தான் அதிக விண்ணப்பங்கள் வருவதாக அமைச்சர் சுட்டிக் காட்டினார். மேலும் மாவட்டங்களுக்கும் மாநிலங்களுக்கும் இடையே பயணம் மேற்கொள்ள, பலர் பயன்படுத்தி வந்த 118 உள்வழிச் சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முழு முடக்க நிலை அறிவிக்கப்பட்டபோது நாள்தோறும் 1.3 மில்லியன் வாகனங்களை சாலையில் காணமுடிந்ததாகக் குறிப்பிட்ட அவர், தற்போது அந்த எண்ணிக்கை 5 லட்சமாக குறைந்துள்ளது என்றார்.

MCO 3.0 காலகட்டத்தில் காவல்துறையும் சம்பந்தப்பட்ட முகமைகளும் இணைந்து நாடு முழுவதும் 85 ஆயிரம் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் இதன்வழி 35 ஆயிரம் கட்டடங்களில் சோதனை நடத்தப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

பேரங்காடிகள் , உணவகங்கள், தொழிற்சாலை உள்ளிட்ட இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்படுகிறது என்று குறிப்பிட்ட டத்தோஸ்ரீ ஹம்ஸா ஸைனுதின் SOPகளை மீறியதாக இதுவரை 3,514 பேருக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், 163 பேர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset